750சிசி புல்லட் உள்பட 3 புதிய மாடல்களை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு!

Written By:

அடுத்த ஆண்டு மூன்று புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு பணிகளை மேற்கொண்டுள்ளதாக இங்கிலாந்து மீடியா ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த புதிய மாடல்களில் 2 புதிய எஞ்சின்கள் கொண்டதாக வெளிவர இருக்கின்றன. ஒன்று 410சிசி எஞ்சினாகவும், மற்றொன்று 750சிசி பேரலல் ட்வின் எஞ்சினாகவும் இருக்கும் என்பது கூடுதல் தகவலாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் கசிந்தது

தகவல் கசிந்தது

இங்கிலாந்தை சேர்ந்த பைக் இறக்குமதி நிறுவனம் வாயிலாக இந்த தகவல் கசிந்திருக்கிறது. இந்த புதிய பைக் எஞ்சின்களின் தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்க்ராம்ப்ளர் மாடல்

ஸ்க்ராம்ப்ளர் மாடல்

புதிய 410சிசி எஞ்சின் சிங்கிள் சிலிண்டர் கொண்டதாக இருக்கும். அதாவது, தற்போதைய 350சிசி எஞ்சினில் மாற்றங்களை செய்து 410சிசி எஞ்சினாக மேம்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

410சிசி பைக் மாடல்கள்

410சிசி பைக் மாடல்கள்

ஸ்க்ராம்ப்ளம் ஸ்டைலிலான புதிய பைக் மாடலிலும், புதிய அட்வென்ச்சர் டூரர் ரக பைக்கிலும் பயன்படுத்தப்படும். அட்வென்ச்சர் டூரர் மாடலுக்காக ஹிமாலயன் என்ற பெயரை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த புதிய பைக்குகள் மூலம் புதிய பைக் ரக மார்க்கெட்டில் காலடி பதிக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டிருக்கிறது.

 750சிசி எஞ்சின்

750சிசி எஞ்சின்

புதிய 750சிசி எஞ்சின் 2 சிலிண்டர்கள் கொண்டதாக இருக்கும். இது பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 800சிசி.,க்கு குறைவான மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க ராயல் என்ஃபீல்டு திட்டம் போட்டுள்ளது. இது ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் மார்க்கெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ட்வின் சிலிண்டர் எஞ்சின்

ட்வின் சிலிண்டர் எஞ்சின்

ஏற்கனவே பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் இன்டர்செப்டார், கான்ஸ்டெல்லேஷன் மற்றும் சூப்பர் மிட்டியோர் ஆகிய பைக் மாடல்களை ராயல் என்ஃபீல்டு தயாரித்தது. இவை மணிக்கு 175 கிமீ வரை டாப் ஸ்பீடு கொண்டதாக இருந்தது. இந்த நிலையில், மீண்டும் பேரலல் ட்வின் எஞ்சின் தயாரிப்பில் ராயல் என்ஃபீல்டு ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 முதலீடு

முதலீடு

புதிய பைக் மாடல்கள் மற்றும் எஞ்சின்கள் தயாரிப்புக்காக ரூ.500 கோடி வரை ராயல் என்ஃபீல்டு முதலீடு செய்ய உள்ளது. இந்தியா மட்டுமின்றி, சென்னை ஆலையிலிருந்து இந்த புதிய பைக் மாடல்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 
English summary
According to reports, Chennai Based Royal Enfield will launch at least three new models in India including a parallel-twin bike by next year.
Story first published: Friday, February 27, 2015, 13:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark