புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 லிமிடேட் எடிசன் அறிமுகம்: ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு!

Posted By:

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் லிமிடேட் எடிசன் மாடல்  அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்பேட்ச் எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ஏற்ற வகையில், ரைடிங் கியர் எனப்படும் பிரத்யேக உடைகள் மற்றும் இதர ஆக்சஸெரீகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள் மற்றும் பிரத்யேக ஆக்சஸெரீகளை ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்து வாங்க முடியும். இந்தியா தவிர்த்து, 50 வெளிநாடுகளில் இந்த டெஸ்பேட்ச் எடிசன் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த லிமிடேட் மாடலின் சிறப்புகள் என்னென்ன, ரைடிங் கியர்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டெஸ்பேட்ச் ரைடர்கள்

டெஸ்பேட்ச் ரைடர்கள்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது, போர் நடக்கும் இடத்தில் இருக்கும் நிலவரம் பற்றி, ராணுவ கட்டுப்பாட்டு மையங்களுக்கு முக்கியத் தகவல்களை மோட்டார்சைக்கிள் மூலமாக தகவல் பரிமாறும் வீரர்களை டெஸ்பேட்ச் ரைடர்கள் என்று அழைத்தனர். மோசமான சீதோஷ்ண நிலை மற்றும் சாலை நிலைகளை கடந்து இரவு, பகலாக மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்து தகவல்களை அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சேர்ப்பதுதான் டெஸ்பேட்ச் ரைடர்களின் பணி. அவர்களின் தீரச் செயலை போற்றும் விதத்திலேயே இந்த டெஸ்பேட்ச் எடிசன் மாடலை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது.

பிரத்யேகத் தன்மை

பிரத்யேகத் தன்மை

டெஸ்பேட்ச் ரைடர்கள் பயன்படுத்திய ராணுவ மோட்டார்சைக்கிள்களின் தோற்ற அம்சங்களுடன் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர, அந்த டெஸ்பேட்ச் ரைடர்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்திய உடை, கையுறைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றின் பிரதிபலிக்கும் வகையிலேயே இப்போது ரைடிங் கியர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அளவுகள்

அளவுகள்

ரைடிங் கியர்கள் எனப்படும் மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது அணிந்துகொள்வதற்கான லெதர் ஜாக்கெட், பனியன்கள், கால் சட்டைகள், கால் பாதுகாப்பு கவசங்கள், தண்ணீர் புகாத வசதி கொண்ட தோல் பைகள், பர்ஸ், பெல்ட், முழு காலணிகள் ஆகியவை பல்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 தனித்துவம்

தனித்துவம்

டெசர்ட் ஸ்ட்ரோம், ஸ்குவாட்ரான் புளூ மற்றும் பேட்டில் க்ரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த பைக்குகளை உரிமையாளர்கள் தங்களது விருப்பப்படி கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். எனவே, ஒன்றைப் போல் மற்றொன்று இருக்காது. இதன் எஞ்சின் கருப்பு வண்ணத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு வருகிறது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தமாக 600 கிளாசிக் 500 மாடலின் டெஸ்பேட்ச் எடிசந் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு வண்ணத்திலும் தலா 200 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும். இதில், பேட்டில் க்ரீன் வண்ணம் வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

 முன்பதிவு

முன்பதிவு

விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து வாங்க முடியும். விருப்பமுள்ளவர்கள் store.Royalenfield.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூலை 15 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 
English summary
Royal Enfield has Launched World-War Inspired Limited Edition Classic 500 motorcycle and riding gears.The new bikes and gears will be available via company's online channel in India as well as select international markets

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark