ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் எடிசன் விலை அறிவிப்பு... மவுஸை பிடிச்சுகிட்டு ரெடியா இருங்க!

Posted By:

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் டெஸ்பேட்ச் எடிசன் மாடலின் விலை விபரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடலுக்கு வரும் 15ந் தேதி முன்பதிவு துவங்குகிறது.

ராணுவ உடுப்பு

ராணுவ உடுப்பு

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளில் ராணுவ உடுப்பு தரித்தது போன்ற ஸ்டிக்கருடன் மூன்று வித வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மூன்று வண்ணங்கள்

மூன்று வண்ணங்கள்

நம் நாட்டில் டெசர்ட் ஸ்டார்ம் மற்றும் ஸ்குவாட்ரான் புளூ ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும். பேட்டில் க்ரீன் டெஸ்பேட்ச் என்ற வண்ணம் வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

விற்பனை எண்ணிக்கை

விற்பனை எண்ணிக்கை

மொத்தம் 200 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே இந்த டெஸ்பேட்ச் எடிசனில் விற்பனை செய்ய உள்ளது ராயல் என்ஃபீல்டு.

பிரத்யேக தன்மை

பிரத்யேக தன்மை

டெஸ்பேட்ச் எடிசனில் வெளிவரும் ஒவ்வொரு மோட்டார்சைக்கிளும் வெவ்வேறு சிறப்புகளுடன் ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 சிறப்புகள்

சிறப்புகள்

இத்தாலிய லெதர் இருக்கை, லெதர் பக்கிள் கொண்ட ஏர் ஃபில்டர் பெட்டி போன்றவை இதன் சிறப்பம்சங்களாக இருக்கிறது.

 போர் வீரர்கள் நினைவாக...

போர் வீரர்கள் நினைவாக...

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது, போர் நடக்கும் இடத்தில் இருக்கும் நிலவரம் பற்றி, ராணுவ கட்டுப்பாட்டு மையங்களுக்கு முக்கியத் தகவல்களை மோட்டார்சைக்கிள் மூலமாக தகவல் பரிமாறும் வீரர்களை டெஸ்பேட்ச் ரைடர்கள் என்று அழைத்தனர். மோசமான சீதோஷ்ண நிலை மற்றும் சாலை நிலைகளை கடந்து இரவு, பகலாக மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்து தகவல்களை அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சேர்ப்பதுதான் டெஸ்பேட்ச் ரைடர்களின் பணி. அவர்களின் தீரச் செயலை போற்றும் விதத்திலேயே இந்த டெஸ்பேட்ச் எடிசன் மாடலை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது.

 ரைடிங் கியர்

ரைடிங் கியர்

டெஸ்பேட்ச் ரைடர்கள் பயன்படுத்திய ராணுவ மோட்டார்சைக்கிள்களின் தோற்ற அம்சங்களுடன் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர, அந்த டெஸ்பேட்ச் ரைடர்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்திய உடை, கையுறைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றின் பிரதிபலிக்கும் வகையிலேயே இப்போது ரைடிங் கியர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னைக்கு பெருமை...

சென்னைக்கு பெருமை...

சென்னை ஒரகடம் ஆலையில் தயாரிக்கப்பட்டதற்கான பேட்ஜும் இந்த மோட்டார்சைக்கிளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 டெஸ்பேட்ச் எடிசனுக்கு ரூ.2.24 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வரும் 15ந் தேதி முதல் முன்பதிவு ஆன்லைனில் துவங்க இருப்பதால், வாங்க விருப்பமுள்ளவர்கள் தயாராக இருப்பது நல்லது. சாதாரண கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் ரூ.1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 
English summary
Royal Enfield, India's oldest bike maker, has hopped on the e-commerce bandwagon with the commercial launch of the limited edition Classic 500. Priced at Rs 2.24 lakh (on-road, Mumbai), at least 200 of these war-inspired camouflage Classic 500 will be opened for online bookings on July 15. Price of a regular Classic 500 is Rs 1.6 lakh in Mumbai

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark