நவ.20-ல் கோவாவில் ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா கொண்டாட்டங்கள் துவங்குகிறது

Written By:

ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா நவம்பர் 20, 2015 முதல் கோவாவில் நடத்தப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா என்ற வருடாந்திர நிகழ்ச்சி நவம்பர் 20 முதல் நவம்பர் 22 வரை நடைபெற உள்ளது. இது கோவாவில் உள்ள வகேடார் என்ற இடத்தில் நிகழ உள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து சுமார் 6,000-திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

2015-ஆம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா எடிஷனில், இண்டியன் ஓஷன், ரகு தீக்‌ஷித், கர்ஷ் காலே, ட்யூவளிஸ்ட் இன்குய்ரி, எஃப்16 மற்றும் டீஜே ந்யூக்லியா உள்ளிட்ட இசை குழுக்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்பாளர்களை உற்சாகபடுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள், ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியாயில், கஸ்டமைஸ் செய்யபட்ட பல்வேறு ராயல் என்ஃபீல்டு மோட்டர்சைக்கிகளும் இடம் பெற உள்ளன.

இந்தியா முழுவதிலும் இருந்து, பைக் வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கபட்ட அல்லது மறுவடிவமைக்கபட்ட ஏராளமான புல்லட்கள் இடம் பெற உள்ளது. சிறந்த கஸ்டம் பைக் ஆஃப் ரைடர் மேனியா 2015 என்ற பெயரில் விருதும் வழங்கப்பட உள்ளது.

இதை தவிர, ராயல் என்ஃபீல்டு நிறுவனம், வேறு சில போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. டர்ட் டிரக் டிரைவிங், நெடுந்தூர பயண ஃபோரம், அசெம்பிலி வார்ஸ், ஆர்ம் ரெஸ்ட்லிங், ஸ்லோ (மெதுவான) பைக் ரேஸ், பைக் போட்டி, பீர் குடித்தல் உள்ளிட்ட பல்வேறு ஸ்வாரஸ்யமான போட்டிகளும் நடைபெற உள்ளது.

இந்த 2015 ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா-வில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்களின் அடுத்த வெளியீடான - தி ஹிமாலயன் (410 சிசி குரூஸர்) இரு சக்கர வாகனத்தையும் காட்சிபடுத்த உள்ளதாக தெரிகிறது.

English summary
Royal Enfield Rider Mania In Goa From 20th November 20, 2015 to 22nd November 2015. The event is being held in Vagator, Goa. This year, Royal Enfield (RE) is expecting participation from over 6,000 bikers from India as well as other countries.
Story first published: Saturday, November 7, 2015, 12:49 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos