ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் எப்போது வரும் என தவிப்பவர்களுக்காக...!!

Posted By:

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடமிருக்கும் இருக்கும் மோட்டார்சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மதிப்பு இருந்து வருகிறது. அதுவும் அந்த நிறுவனம் ஓர் புதிய மாடலை அறிமுகம் செய்யும்போது, அந்த எதிர்பார்ப்பு மிக அதிகமாக எழுவது இயல்பு.

அந்த எதிர்பார்ப்பையும், ஆவலையும் கிளறியிருக்கும் புதிய மாடல்தான் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக். பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக்கின் அறிமுகத்தை சில மாதங்கள் ஒத்தி வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. ஆனால், அதற்கு முன்பே இந்த பைக்கை தரிசனம் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த விபரங்களையும், இதுவரை வெளியான ஸ்பை படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

புதிய ரகம்

புதிய ரகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடலான ஹிமாலயன் பைக் அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு சாலையிலும் செல்லத்தக்க விதத்திலும், நீண்ட தூர பயணங்களுக்கும் சிறப்பானதாக இருக்கும் விதத்திலும், வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், வசதியாக அமர்ந்து செலுத்துவதற்கு ஏதுவான ஓட்டுனர் இருக்கை அமைப்பு, எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி பைக்கில் பயன்படுத்தப்பட்ட ஹெட்லைட்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 மாடல்கள்

மாடல்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் இரண்டு விதமான மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்டான்டர்டு மற்றும் அட்வென்ச்சர் என்று இரண்டு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்டான்டர்டு மாடலில் முன் சக்கரத்திற்கான மட் கார்டு டயரை ஒட்டியே கொடுக்கப்பட்டிருக்கும். அட்வென்ச்சர் மாடலில் மட் கார்டு சக்கரத்தைவிட்டு அதிக இடைவெளி விட்டு கொடுக்கப்பட்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் புதிய 410சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 எச்பி பவரையும், 32 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 தரிசனம்

தரிசனம்

வரும் 20ந் தேதி கோவாவில் நடைபெற இருக்கும் ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா கொண்டாட்டத்தின்போது, இந்த புதிய பைக் மாடலை காட்சிக்கு வைக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டிருக்கிறது.

 விற்பனை?

விற்பனை?

அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Spy Shot images 

English summary
The Royal Enfield Himalayan (adventure-tourer motorcycle) is the company's next big launch for India. we expect the Himalayan to make its debut at the upcoming Royal Enfield Rider Mania, which is scheduled to take place from Nov. 20 to Nov. 22, 2015, in Vagator, Goa. Expect prices to start at Rs. 2 lakh onward.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark