சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது!

Written By:

இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு புதிய முகவரி தந்திருக்கும் மாடல் ஜிக்ஸெர். முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நேக்டு பாடி ஸ்டைல் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் அமோக வரவேற்பை பெற்றது. பட்ஜெட் விலையில் ஓர் சிறப்பான ஸ்டைல் கொண்ட மாடலாக வந்ததும், செயல்திறன் மிக்க எஞ்சினும் இளைஞர்களை கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து, ஜிக்ஸெர் வெற்றியை தக்க வைக்கும் விதத்தில், அதன் ஃபேர்டு பாடி ஸ்டைல் கொண்ட மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஜிக்ஸெர் பிராண்டுக்கு கிடைத்திருக்கும் மதிப்பை வைத்து, அடுத்து ஒரு புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம். அந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

250சிசி மாடல்

250சிசி மாடல்

தற்போது 155சிசி எஞ்சினுடன் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் ஆகிய இரண்டு மாடல்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஃபேர்டு வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

புதிய 250சிசி ஜிக்ஸெர் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டதாக வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 25 பிஎச்பி முதல் 30 பிஎச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 250 சிசி எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

 டிசைன்

டிசைன்

சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் போன்ற அதிசக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களின் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கும் என்று சொல்லப்படுவதால், இளைஞர்களை நிச்சயம் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடலில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படும். அதேபோன்று, கூடுதல் சிறப்பம்சம் கொண்ட டயர்கள் பயன்படுத்தப்படுவதோடு, வெகு சிறப்பான கையாளுமை கொண்டதாக ஃப்ரேம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் மாடல் காட்சிக்கு வைக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி பைக் மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

தோற்றம், எஞ்சின் ஆகியவற்றின் அடிப்படையில் ஹோண்டா சிபிஆர் 250ஆர், ஹயோசங் ஜிடி250ஆர், பெனெல்லி டிஎன்டி25 ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

English summary
Suzuki Motorcycle India Private Limited could showcase an all-new Gixxer 250 at the 2016 Auto Expo. Quarter litre segment is popular in Asian and other emerging markets around the world. The Gixxer 250 by Suzuki could be launched soon after its showcase at the Auto Expo.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark