சுஸுகி ஜிக்ஸெர் மாடல்களில் விரைவில் ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்!

Written By:

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு இநந்தியாவில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மாடல் சுஸுகி ஜிக்ஸெர்.

நேக்டு மற்றும் ஃபேர்டு வெர்ஷன்களில் சுஸுகி ஜிக்ஸெர் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் பண்டிகை கால விற்பனைக்காக புதிய வண்ணக் கலவைகளில் ஜிக்ஸெர் அறிமுகம் செய்யப்பட்டது.

சுஸுகி ஜிக்ஸெர்
 

இதைத்தொடர்ந்து, தற்போது சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளில் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை வழங்க சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விரைவில் பின்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் இருக்கும் 155சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 14.59 எச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்கக்கூடியது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

English summary
Now as an update, the Japanese manufacturer is looking at providing rear disc brake as an option. It will be offered on both Gixxer and Gixxer SF models within the following month.
Story first published: Monday, September 21, 2015, 12:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark