சுஸுகி ஜிக்ஸர் பைக்கில் ஸ்கிட் பிளேட் ஆப்ஷனலாக அறிமுகம்

Written By:

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், தங்களின் சுஸுகி ஜிக்ஸர் மோட்டார்சைக்கிளை விருப்ப தேர்வு முறையிலான ஸ்கிட் பிளேட்-டுடன் வழங்குகின்றனர்.

இந்தியாவின் வாகன சந்தைகளில் நிலவும் கடும் போட்டிகளுக்கு இடையே, சுஸுகி நிறுவனம் தங்களின் தயாரிப்புகளுக்கு என தனி பெயரை பெற்றுள்ளது.

தேர்வு முறையிலான புதிய ஸ்கிட் பிளேட்-டுடன் வரும் சுஸுகி ஜிக்ஸர் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

கூடுதல் பாதுகாப்பு;

கூடுதல் பாதுகாப்பு;

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்ட ஜிக்ஸர் நேகட் மோட்டார்சைக்கிள் மக்களிடையே உடனடியாக பிரசித்தி பெற்று வெரும் ஹிட்டானது.

இந்த மோட்டார்சைக்கிளின் இஞ்ஜினுக்கு கீழே பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இந்திய சாலைகளின் நிலை சரியில்லாமல் இருப்பதால், ஜிக்ஸர் நேகட் மோட்டார்சைக்கிளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், அது தேர்வு முறையான ஸ்கிட் பிளேட்டுடன் வருகின்றது.

கூடுதல் ஆக்சஸரீயாக விற்பனை;

கூடுதல் ஆக்சஸரீயாக விற்பனை;

அலுமினியத்தால் ஆன இந்த ஸ்கிட் பிளேட், ஜிக்ஸர் மோட்டார் சைக்கிளுக்காக சுஸுகி நிறுவனத்தால் வழங்கபடுகிறது.

கூடுதல் ஆக்சஸரீயாக விற்பனை செய்யபடும் இந்த ஸ்கிட் பிளேட், 1,600 என்ற விலையில் கிடைக்கின்றது.

பாதுகாப்பு உறுதிபடுத்தபடுகிறது;

பாதுகாப்பு உறுதிபடுத்தபடுகிறது;

இந்திய சாலைகளில், ஸ்பீட் பிரேக்கர்களும், குழிகளும் அதிக அளவில் உள்ளன.

இத்தகைய சாலைகளால், கிரான்க்கேஸ் மற்றும் எக்ஹாஸ்ட் பைப் பாதிக்கபடலாம். ஸ்கிட் பிளேட் இந்த பைக்கினை இனி நல்ல முறையில் பாதுகாக்க உதவிகரமாக இருக்கும்.

ஜிக்ஸரை பற்றி...

ஜிக்ஸரை பற்றி...

ஜிக்ஸர் ரக மோட்டார்சைக்கிள் இளம் தலைமுறையினர் இடையே மிகவும் புகழ் வாய்ந்ததாக உள்ளது.

ஜிக்ஸர், ஜிக்ஸர் எஸ்எஃப் மற்றும் லெட்ஸ் ஸ்கூட்டர் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளின் அறிமுகத்தால், சுஸுகி நிறுவனத்தின் விற்பனை பெரும் அளவு கூடியுள்ளது.

இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஆக்சஸரீகளை சுஸுகி வழங்கியுள்ளது, நல்ல முடிவாக அமைந்துள்ளது.

சுஸுகியின் வருங்கால திட்டம்;

சுஸுகியின் வருங்கால திட்டம்;

அடுத்தபடியாக சுஸுகி நிறுவனம், ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்குகளை, ஃப்ரண்ட் வீல் மற்றும் ரியர் வீல்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்க திட்டமிட்டுள்ளது.

சுஸுகி நிறுவனம், வருங்காலத்தில் இன்னும் கூடுதல் திறன்மிக்க ஜிக்ஸர் 250 மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முன்னோட்டமாக, அதிக திறன்மிக்க ஜிக்ஸர் 250 மாடல் பைக்கை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது தான், சுஸுகி நிறுவனம் மெல்ல மெல்ல அதன் பைக்களை ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

சுஸுகி ஜிக்ஸர் மோட்டார்சைக்கிள் - 89,236 ரூபாய் (ஆன் - ரோட் விலை - மும்பை)

முழுவதுமாக ஃபேரிங் செய்யபட்ட நேகட் வெர்ஷன் மோட்டார்சைக்கிள் - 99,039 (ஆன் - ரோட் விலை - மும்பை)

English summary
Suzuki Motorcycle is offering the Suzuki Gixxer Motorcycle with Optional Skid Plate To Customers. This brushed aluminium skid plate is offered by Suzuki for Gixxer at a price of Rs. 1,600. This new skid plate would protect the exhaust pipe and crankcase of this Suzuki Gixxer Motorcycle.
Story first published: Saturday, December 19, 2015, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark