250சிசி ஜிக்ஸெர் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த சுஸுகி திட்டம்!

Written By:

சுஸுகி ஜிக்ஸெர் பைக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, அதே பிராண்டில் அதிக திறன் வாய்ந்த மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, புதிய மாடல்களை வடிவமைக்கும் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சுஸுகி ஜிக்ஸெர் மாடல்கள் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

தற்போது 155சிசி சுஸுகி ஜிக்ஸெர் பைக் இரு மாடல்களில் கிடைக்கிறது. அதாவது, நேக்டு பாடி ஸ்டைல் மற்றும் ஃபேர்டு வெர்ஷனில் கிடைக்கிறது. அதேபோன்று, புதிய ஜிக்ஸெர் பைக்குகளும் இரு மாடல்களில் வெளிவர இருக்கின்றன. முதலில் நேக்டு வெர்ஷனும், பின்னர் ஃபுல் ஃபேர்டு வெர்ஷனும் அறிமுகம் செய்ய சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறதாம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஜிக்ஸெர் மாடல்களில் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்சினை இந்தியாவிலேயே தயாரிக்கிறதாம் சுஸுகி. மேலும், இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎஸ் முதல் 28 பிஎஸ் பவரை அளிக்க வல்லதாக இருக்கும். மேலும், இது சிங்கிள் சிலிண்டர் எஞ்சினாக இருக்கும். ஏனெனில், இரண்டு சிலிண்டர்கள் கொண்ட சுஸுகி இனசுமா வெற்றிபெறவில்லை. இதையடுத்து, சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடலை சிங்கிள் சிலிண்டர் கொண்டதாக அறிமுகம் செய்ய இருக்கிறது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய சுஸுகி ஜிக்ஸெர் மாடல்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும். பின்னர், ஆண்டு இறுதியில் இந்த புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 ஜிக்ஸெர் வரவேற்பு

ஜிக்ஸெர் வரவேற்பு

ஜிக்ஸெர் பிராண்டுக்கு கிடைத்த வரவேற்பை தக்க வைக்கும் விதத்தில், இந்த புதிய மாடல்களை அதே பிராண்டில் அறிமுகம் செய்ய சுஸுகி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல்களை இந்திய மற்றும் ஜப்பானிய பொறியாளர்கள் இணைந்து வடிவமைத்து வருகின்றனர்.

 
English summary
Suzuki is exploring options of introducing a quarter-litre Gixxer in India, at the upcoming Auto Expo. Suzuki India and Japanese engineers will work together on development of this new engine.
Story first published: Monday, June 15, 2015, 16:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark