இரண்டு ஏடிவி ரக வாகனங்களை அறிமுகப்படுத்திய சுஸுகி... ரூ.5.45 லட்சம் முதல்...!!

Written By:

இந்தியாவில், இரண்டு ஏடிவி ரக வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புனே நகரில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் இந்த இரண்டு வாகனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மணல் பாங்கான சாலைகள், சாதாரண ரக வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கூட இந்த வாகனங்களை எளிதாக இயக்க முடியும். இந்த இரு வாகனங்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏடிவி ரக வாகனம்

ஏடிவி ரக வாகனம்

அனைத்து சாலை நிலைகளுக்கும் உகந்தது என்பதால், இவற்றை ஆல் டெர்ரெயின் வெஹிக்கிள் என்றும் சுருக்கமாக ஏடிவி என்றும் அழைக்கின்றனர். அதற்கு தக்கவாறு இந்த வாகனங்களின் வடிவமைப்பு மிகவும் வித்தியாசப்பட்டு இருக்கிறது.

சுஸுகி மாடல்கள்

சுஸுகி மாடல்கள்

சுஸுகி ஒஸார்க் 250 மற்றும் க்வாட்ஸ்போர்ட் இசட்400 என்ற இரு ஏடிவி மாடல்களை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

விலை

விலை

சுஸுகி ஒஸார்க் 250 ஏடிவி வாகனம் ரூ.5.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், சுஸுகி க்வாட்ஸ்போர்ட் இசட்400 ஏடிவி வாகனம் ரூ.8.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

விற்பனை நிலையங்கள்

விற்பனை நிலையங்கள்

முதல்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர், புனே, கோல்கட்டா, ஜோத்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

சுஸுகி ஒஸார்க் 250 மாடல் சாவகசமான பொழுதுபோக்கு பயன்பாடு கொண்டதாகவும், க்வாட்ஸ்போர்ட் இசட்400 மாடல் சாகச விளையாட்டுகளுக்கு உகந்ததாகவும் இருக்கும்.

English summary
Suzuki launches two new All Terrain Vehicles (ATV) in the Indian market called the Ozark 250 and Quadsport Z400 models. Both models are being introduced in India via the Completely Built Unit (CBU) route.
Story first published: Monday, December 7, 2015, 17:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark