விற்பனையில் டாப்- 10 ஸ்கூட்டர்கள்... டிவிஎஸ் ஜுபிடர் அபாரம்!

By Saravana

கடந்த மாதம் விற்பனையில் இந்தியாவின் டாப்- 10 ஸ்கூட்டர்களின் விபர பட்டியலை இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டிருக்கிறது.

அதில், டிவிஎஸ் ஜுபிடர், ஹீரோ டூயட் மற்றும் மஹிந்திரா கஸ்ட்டோ மாடல்கள் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன. உங்கள் அபிமான ஸ்கூட்டர் மாடல்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

10. டிவிஎஸ் ஸெஸ்ட்

10. டிவிஎஸ் ஸெஸ்ட்

டிவிஎஸ் ஸெஸ்ட் ஸ்கூட்டர் 10வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 7,906 ஸெஸ்ட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் 10,427 ஸெஸ்ட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது விற்பனை 24 சதவீதம் குறைந்தது. இலகுவான இந்த ஸ்கூட்டர் பெண்களுக்கான சிறந்த சாய்ஸ்.

09. மஹிந்திரா கஸ்ட்டோ

09. மஹிந்திரா கஸ்ட்டோ

டிவி விளம்பரங்களால் மஹிந்திரா கஸ்ட்டோ மீண்டும் டாப்- 10 பட்டியலில் அதிரடியாக நுழைந்துள்ளது. கடந்த மாதம் 8,646 மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருப்பதுடன், கடந்த ஆண்டு நவம்பர் விற்பனையைவிட தற்போது 173 சதவீதம் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. இருக்கையை உயர்த்திக் கொள்ளும் வசதி, டிசைன் போன்றவற்றால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

08. ஹீரோ ப்ளஷர்

08. ஹீரோ ப்ளஷர்

ஹீரோ நிறுவனம் புதிய ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்கியதால், நீண்ட காலமாக இருந்து வரும் ஹீரோ ப்ளஷர் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 8வது இடத்தை ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர் பிடித்தது. மேலும், 12,387 ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. அடக்கமான வடிவமைப்பு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வலுவான டீலர்ஷிப் நெட்வொர்க் போன்றவற்றை இந்த ஸ்கூட்டருக்கு பக்கபலம்.

 07. சுஸுகி ஆக்செஸ்

07. சுஸுகி ஆக்செஸ்

125சிசி மார்க்கெட்டில் சிறந்த மாடலாக வலம் வருகிறது. கடந்த மாதம் 7வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 12,959 சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் விற்பனையை ஒப்பிடும்போது, 36 சதவீதம் விற்பனை சரிந்தது. புதிய மாடல்களின் வரவு இந்த ஸ்கூட்டருக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. டிசைன், செயல்திறனில் சிறந்த ஸ்கூட்டர் மாடல்.

06. யமஹா ஃபேஸினோ

06. யமஹா ஃபேஸினோ

கடந்த மாதம் 6வது இடத்தை யமஹா ஃபேஸினோ பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 13,078 யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. வித்தியாசமான வடிவமைப்பும், கைக்கு தோதான விலையும் இந்த ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருப்பதுடன், யமஹா விற்பனையிலும் முக்கிய பங்களிப்பை தந்து வருகிறது.

05. ஹோண்டா டியோ

05. ஹோண்டா டியோ

இளைஞர்கள், யுவதிகளின் சிறப்பான சாய்ஸாக வலம் வருகிறது. டிசைன், ஹோண்டாவின் நம்பகமும், செயல்திறனும் மிக்க எஞ்சின் ஆகியவை இந்த ஸ்கூட்டரின் விற்பனையை தூக்கிப் பிடித்து வருகின்றன. கடந்த மாதம் 17,090 ஹோண்டா டியோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் விற்பனையைவிட தற்போது 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

04. ஹீரோ டூயட்

04. ஹீரோ டூயட்

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டூயட் ஸ்கூட்டர் மிகச்சிறப்பான விற்பனையை பதிவு செய்திருப்பதுடன், அதிரடியாக டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்ததுடன் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 18,240 ஹீரோ டூயட் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், எஞ்சின், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இந்த ஸ்கூட்டரின் பக்கபலமாக உள்ளது.

03. ஹீரோ மேஸ்ட்ரோ

03. ஹீரோ மேஸ்ட்ரோ

புதிய ஸ்கூட்டர் மாடல்களின் வரவால் ஹீரோ மேஸ்ட்ரோ விற்பனையில் சிறிது சரிவு காணப்படுகிறது. கடந்த மாதம் 35,672 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது, இது 15 சதவீதம் குறைவு. ஆக்டிவா ஸ்கூட்டரின் ரீபேட்ஜ் மாடல் என்பதுடன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த ஸ்கூட்டரை இரண்டாமிடத்தில் வைத்திருந்தது. ஆனால், தற்போது அந்த இடத்தை அதிரடியாக பறித்தது யார் என்று அடுத்த ஸ்லைடில் காணலாம்.

02. டிவிஎஸ் ஜுபிடர்

02. டிவிஎஸ் ஜுபிடர்

ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை அதிரடியாக வீழ்த்தி இரண்டாமிடத்தை பிடித்திருக்கிறது டிவிஎஸ் ஜுபிடர். கடந்த மாதம் 51,768 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் விற்பனையைவிட, கடந்த மாதம் 61 சதவீதம் விற்பனை வளர்ச்சி பெற்றிருக்கிறது.

 01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

எந்தவொரு ஸ்கூட்டரும் எளிதில் தொட முடியாத உச்சத்தில் ஹோண்டா ஆக்டிவா உள்ளது. கடந்த மாதம் 1,83,824 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், கடந்த ஆண்டு நவம்பர் மாத விற்பனையைவிட 4 சதவீதம் சரிந்தது. புதிய மாடல்களின் வரவால் சிறிது சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம். நம்பகமான செயல்திறன் மிக்க எஞ்சின், வடிவம், தரம் என அனைத்திலும் நிறைவை தரும் ஸ்கூட்டர் மாடல்.

Most Read Articles
மேலும்... #டாப் 10 #auto news #bike news
English summary
Top 10 Best Selling Scooters In November 2015.
Story first published: Tuesday, December 29, 2015, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X