டிசம்பர் விற்பனையில் டாப் - 10 இருசக்கர வாகனங்கள்!!

Written By:

இருசக்கர வாகன விற்பனை முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை சிறிதளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த மாதம் விற்பனையில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் முதலிடத்ததை பிடித்து அசத்தியது. கடும் போட்டி நிலவும் இருசக்கர வாகன மார்க்கெட்டில் கடந்த மாதம் டாப் - 10 இடங்களை பிடித்த இருச்சக்கர வாகன மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

10. பஜாஜ் பல்சர்

10. பஜாஜ் பல்சர்

கடந்த மாதம் பஜாஜ் பல்சர் பைக் 10வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 38,419 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 9வது இடத்தில் இருந்த பல்சர் தற்போது 10வது இடத்துக்கு பின்தங்கியது.

 9. ஹோண்டா ட்ரீம்

9. ஹோண்டா ட்ரீம்

கடந்த மாதம் 9வது இடத்தில் ஹோண்டா ட்ரீம் பைக் பிடித்தது. கடந்த மாதம் 42,530 ட்ரீம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் 7வது இடத்தில் இருந்த ஹோண்டா ட்ரீம் கடந்த மாதம் 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

8.ஹீரோ மேஸ்ட்ரோ

8.ஹீரோ மேஸ்ட்ரோ

கடந்த மாதம் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் 8வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 42,988 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

7. ஹீரோ கிளாமர்

7. ஹீரோ கிளாமர்

கடந்த மாதம் 47,355 ஹீரோ கிளாமர் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் 8வது இடத்தில் இருந்த கிளாமர் ஒரு இடம் முன்னேறி 7ம் இடத்தை பிடித்தது.

6. மொபட்

6. மொபட்

கடந்த மாதம் 58,929 மொபட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் சூப்பர் கணக்கில்தான் சேரும்.

5. ஹோண்டா சிபி ஷைன்

5. ஹோண்டா சிபி ஷைன்

கடந்த மாதம் 5வது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் இருந்தது. கடந்த மாதம் 62,439 ஹோண்டா சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்திலும் 5வது இடத்தில்தான் இருந்தது.

4. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

4. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

கடந்த மாதம் ஹீரோ டீலக்ஸ் பைக் 4வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 78,343 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன.

3. ஹீரோ பேஷன்

3. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் மூன்றாவது இடத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பேஷன் பைக் பிடித்தது. கடந்த மாதத்தில் 84,753 பேஷன் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது.

 2. ஹோண்டா ஆக்டிவா

2. ஹோண்டா ஆக்டிவா

இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டருக்கு ஆக்டிவாதான் பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது. கடந்த மாதம் 1,80,879 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

 1. ஹீரோ ஸ்பிளென்டர்

1. ஹீரோ ஸ்பிளென்டர்

கடந்த மாதம் நம்பர்- 1 இடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 2,15,161 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 
English summary
As per SIAM data, We listed out, Top 10 Selling Two Wheelers in India by December 2014.
Story first published: Tuesday, January 20, 2015, 21:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark