மீண்டும் நம்பர் 1 இடத்தில் ஹோண்டா ஆக்டிவா... ஜூனில் டாப் 10 டூ வீலர்கள்!

By Saravana

இருசக்கர வாகன மார்க்கெட்டில் முதல் இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. முதல் இடத்தில் ராஜா மாதிரி இருந்து வந்த ஹீரோ ஸ்பிளென்டருக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரால் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த மாதமும் ஹீரோ ஸ்பிளென்டரை பின்னுக்குத் தள்ளி ஹோண்டா ஆக்டிவா முதல் இடத்தை பிடித்தது. மேலும், ஸ்கூட்டர்களால் பைக்குகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை டிவிஎஸ் ஜுபிடரும் நிரூபித்துள்ளது. ஆம், கடந்த மாதம் முதல்முறையாக டாப் 10 பட்டியலுக்குள் மெதுவாக முன்னேறியிருக்கிறது டிவிஎஸ் ஜுபிடர்.

அந்த இடத்தில் இருந்த ஹோண்டா ட்ரீம் பைக் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. ஜூன் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. டிவிஎஸ் ஜுபிடர்

10. டிவிஎஸ் ஜுபிடர்

மே மாதத்தில் 10 வது இடத்தில் இருந்த ஹோண்டா ட்ரீம் பைக்கை பட்டியலில் இருந்து வெளியேற்றிவிட்டு, டிவிஎஸ் ஸ்கூட்டர் மெதுவாக முன்னேறியிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் 36,650 ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. ஜூபிடர் ஸ்கூட்டரின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருவதால், தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைக்குமா அல்லது கீழே இறங்குமா என்பதை வரும் மாதங்களின் விற்பனை மூலமாக தெரிய வரும்.

09. பஜாஜ் பல்சர்

09. பஜாஜ் பல்சர்

கடந்த மாதம் 9வது இடத்தில் பஜாஜ் பல்சர் பிடித்தது. பல்சர் வரிசையில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், சரிவு காணப்படுகிறது. கடந்த மாதம் 50,962 பல்சர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன.

08. பஜாஜ் சிடி 100

08. பஜாஜ் சிடி 100

பஜாஜ் சிடி 100 பைக் 8வது இடத்தை பிடித்தது. கடந்த ஜூனில் மொத்தமா 54,362 சிடி 100 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்திருக்கிறது. அதிக மைலேஜ், குறைவான விலை போன்றவை காரணமாக இந்த பைக் மீண்டும் மார்க்கெட்டில் ரீ- என்ட்ரி கொடுத்திருக்கிறது. அதனை எடுத்தியம்பும் வகையிலேயே, டாப் 10 பட்டியலில் இடம்பிடித்தது.

07. ஹீரோ கிளாமர்

07. ஹீரோ கிளாமர்

கடந்த மாதம் 7வது இடத்தில் ஹீரோ கிளாமர் உள்ளது. கடந்த மாதம் 57,477 கிளாமர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது கிளாமர் விற்பனை 41 சதவீதம் குறைந்துவிட்டது.

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

கடந்த மாதம் 6வது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் இடம்பிடித்திருக்கிறது. ஊரக பகுதிகளுக்கு ஏற்ற சிறப்பான மாடலாக தொடர்ந்து சாதித்து வருகிறது. கடந்த மாதத்தில் 59,304 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. டிவிஎஸ் மோட்டார்ஸ் வர்த்தகத்தில் மிக முக்கியமான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது விற்பனை 3 சதவீதம் குறைந்தது.

05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

கடந்த மாதம் 5வது இடத்தை பிடித்திருக்கும் ஷைன் 125சிசி செக்மென்ட்டில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. செயல்திறனும், அதிர்வுகள் குறைவான எஞ்சின், மைலேஜ், ஸ்டைல் என அனைத்திலும் வாடிக்கையாளர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. கடந்த மாதத்தில் 65,350 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் விற்பனையுடன் ஒப்பிடும்போது, 14 சதவீதம் குறைவான விற்பனையே இப்போது பதிவாகியுள்ளது.

04. ஹீரோ டீலக்ஸ்

04. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதத்தில் 4வது இடத்தில் ஹீரோ டீலக்ஸ் பைக் உள்ளது. பட்ஜெட் பைக்கை விரும்புபவர்களுக்கு மிக சரியான சாய்ஸ். கடந்த மாதத்தில் 84,987 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் 1,24,463 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. ஹீரோவின் வர்த்தகத்திற்கு தோள் கொடுத்து வரும் மாடல். சரியான விலை, ஸ்டைலான தோற்றம், அதிக மைலேஜ் போன்றவை காரணமாக இந்த பைக் வாடிக்கையாளர்களிடம் தனி மதிப்பை பெற்றிருக்கிறது.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

நகர்ப்புறம், கிராமப்புறம் என எந்த பகுதியானாலும், அனைவராலும் விரும்பப்படும் ஓர் மாடல் ஹீரோ ஸ்பிளென்டர். தோற்றம், மைலேஜ், விலை போன்றவை பல விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து பல ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த மாதம் 1,95,108 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

கடந்த மாதம் ஹீரோ ஸ்பிளென்டரை பின்னுக்குத் தள்ளி மீண்டும் அரியணையில் அமர்ந்து இருக்கிறது ஹோண்டா ஆக்டிவா. கடந்த மாதத்தில் 1,96,913 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. ஹீரோ ஸ்பிளென்டருக்கும், ஹோண்டா ஆக்டிவாவிற்கும் உள்ள விற்பனை எண்ணிக்கை மிக குறைவானது. ஆனால், ஹீரோ ஸ்பிளென்டர் விற்பனை ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கும் நிலையில், ஹோண்டா ஆக்டிவா விற்பனை 37 சதவீதம் உயர்ந்துள்ளதை கவனிக்க வேண்டிய விஷயம்.

Most Read Articles
English summary
Top 10 selling two wheelers in June 2015
Story first published: Friday, July 24, 2015, 10:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X