நடிகர் சங்க தேர்தலை விஞ்சிய போட்டி.. ஆக்டிவாவை வீழ்த்தி ஸ்பிளென்டர் நம்பர்1

Written By:

நடிகர் சங்க தேர்தல் கூட பரவாயில்லை. ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால், இந்த இருசக்கர வாகன மார்க்கெட்டின் நம்பர் 1 இடத்துக்கு ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ ஸ்பிளென்டர் இடையிலான கடும் யுத்தம் முடிவதற்கான அறிகுறியே இல்லை.

கடந்த மூன்று மாதங்களாக விற்பனையில் நம்பர் 1 இடத்தை ஹோண்டா ஆக்டிவா பெற்று வந்தது. இந்த நிலையில், ஒருவழியாக ஹோண்டா ஆக்டிவாவை பின்னுக்குத் தள்ளி செப்டம்பரில் மீண்டும் நம்பர்1 என்ற அரியணையில் அமர்ந்திருக்கிறது ஹீரோ ஸ்பிளென்டர். கடந்த மாதம் விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகன மாடல்களை காணலாம்.

10. டிவிஎஸ் ஜுபிடர்

10. டிவிஎஸ் ஜுபிடர்

ஹோண்டா ஆக்டிவாவாவுக்கு நேர் போட்டியாக களமிறக்கப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் நல்ல பங்களிப்பை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது. கடந்த மாதம் 48,866 ஜுபிடர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்திருக்கிறது. தோற்றம், வசதிகள், மைலேஜ் ஆகியவை இந்த ஸ்கூட்டருக்கான மதிப்பை உயர்த்தியிருக்கின்றன.

09. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

09. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே மொபட் மாடலான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் இருந்து வருகிறது. ஆனால், தற்போது ஸ்கூட்டர்களின் மீதான மோகம் அதிகரித்து இருப்பதால், இந்த மொபட்டின் விற்பனையில் சிறிது தொய்வு காணப்படுகிறது. கடந்த மாதம் 54,559 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விலை குறைவு, ஓட்டுவதற்கு எளிது, பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, கரடுமுரடான சாலைகளுக்கும் சிறப்பான இருசக்கர வாகனம் என்ற பல சிறப்பம்சங்களுடன் வியாபாரிகள், விவசாயிகளின் தோழனாக வலம் வருகிறது.

08. ஹீரோ கிளாமர்

08. ஹீரோ கிளாமர்

கடந்த மாதம் 8வது இடத்தை ஹீரோ கிளாமர் பெற்றது. அதிக மைலேஜ், சிறப்பான எஞ்சின் ஆகியவை இந்த பைக்கிற்கான வரவேற்பை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 55,793 கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

 07. பஜாஜ் சிடி 100

07. பஜாஜ் சிடி 100

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான பஜாஜ் சிடி 100 பைக் 7வது இடத்தை பிடித்திருக்கிறது. மைலேஜ், விலை போன்றவற்றின் மூலம் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

06. பஜாஜ் பல்சர்

06. பஜாஜ் பல்சர்

பஜாஜ் நிறுவனத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பல்சர் பைக்குகள் டாப் 10 பட்டியலில் 6வது இடத்தை பெற்றிருக்கின்றன. கடந்த மாதம் 66,765 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, விற்பனை 2.8 சதவீதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

கடந்த மாதம் ஹோண்டா ஷைன் பைக் 5வது இடத்தை பிடித்தது. கடந்த மாதம் 69,162 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. தோற்றம், மைலேஜ், பட்ஜெட் மட்டுமின்றி, இதன் மென்மையான எஞ்சின் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது.

04. ஹீரோ டீலக்ஸ்

04. ஹீரோ டீலக்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குறைவான விலை பைக் மாடல். தோற்றம், மைலேஜ், எஞ்சின் என அனைத்திலும் தன்னிகரற்ற இந்த பைக் மாடல் பட்ஜெட் விலையில் கிடைப்பதுதான் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை தொடர்ந்து பெற்று வருகிறது. கடந்த மாதம் 4வது இடத்தை பெற்றிருக்கிறது. செப்டம்பரில் 1,01,579 டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

 03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் 3வது இடத்தை ஹீரோ பேஷன் பைக் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 1,08,395 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைன், மைலேஜ் ஆகியவை இந்த பைக்கிற்கு நிரந்தரமான விற்பனையை கொடுத்து வருகிறது.

 02. ஹோண்டா ஆக்டிவா

02. ஹோண்டா ஆக்டிவா

கடந்த சில மாதங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த ஆக்டிவா, கடந்த மாதம் ஸ்பிளென்டரின் விஸ்வரூபத்தால் கீழே இறங்கி இரண்டாவது இடத்தை பெற்றது. கடந்த மாதம் 2,29,382 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது, கடந்த மாதம் ஆக்டிவா விற்பனை 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டிசைன், தரம், மைலேஜ், விலை, மறு விற்பனை மதிப்பு, போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற இருசக்கர வாகனம் போன்ற சிறப்பம்சங்களுடன் மிக வேகமாக தனது விற்பனையை அதிகரித்துக் கொண்டே வருகிறது ஹோண்டா ஆக்டிவா.

01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

ஒருவழியாக ஆக்டிவாவிடம் விட்ட நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறது ஹீரோ ஸ்பிளென்டர் பைக். பண்டிகை கால துவக்கத்தின் அறிகுறியாக ஸ்பிளென்டர் பைக் விற்பனையில் தாக்கம் ஏற்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. கடந்த மாதம் 2,43,188 ஸ்பிளென்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையுடன் ஒப்பிடும்போது, 3.5 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. மென்மையான எஞ்சின், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறந்த பைக் மாடல். மறுவிற்பனையிலும் ஸ்பிளென்டருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது.

டாப் 10 மாடல்கள்

01. செப்டம்பரில் டாப் 10 கார்கள்

02.நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் டாப் 10 கார்கள்

 

English summary
Top 10 Two-wheelers in September 2015.
Story first published: Monday, October 19, 2015, 12:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark