டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள் பைக்கிற்கு ரூ.50,000 தள்ளுபடி!

Written By:

பண்டிகை காலத்தை ஒட்டி, டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள் மோட்டர்சைக்கிள் வாங்குவோருக்கு 50,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.

பண்டிகை காலத்தை ஒட்டி, வாகன நிறுவனங்கள் விதவிதமான சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த கொண்டாட்டங்களை சிறப்பிக்கும் வகையில், டிரயம்ஃப் மோட்டர்சைக்கிள் நிறுவனமும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றனர்.

Triumph Speed Triple available at attractive prices this festive season

டிரயம்ஃப் மோட்டர்சைக்கிள்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் தற்போதைய டிரயம்ஃப் மோட்டர்சைக்கிளை மாற்றி, 1000 சிசி அல்லது அதற்கும் உயர்ந்த மோட்டர்சைக்கிளை வாங்க விரும்பினால், அவர்களுக்கு அப்கிரேட் எக்சேஞ்ச் போனஸ் என்ற வகையில், 50,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள் பைக்கில், 1050 சிசி, 3 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு இஞ்ஜின் கொண்டுள்ளது. இது 9,301 ஆர்பிஎம்-களில், 126.7 பிஎஸ் பவரையும், 7,797 ஆர்பிஎம்-களில் உச்சபட்சமாக 104.82 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

Triumph Speed Triple available at attractive prices for festive season

முன்சக்கரத்தில், 43 மில்லிமீட்டர் அப்-சைட் டவுன் ஷோவா ஃபோர்க்-களை கொண்டுள்ளது. பின் சக்கரத்திற்கு மோனோஷாக் அப்சார்பர் அமைப்பு கொண்டுள்ளது. 4 பிஸ்டன் ப்ரெம்போக்கள் கொண்ட 320 மில்லிமீட்டர் ட்வின் டிஸ்க் பிரேக்கள் முன் சக்கர பிரேக் பணிகளையும், 2 பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட நிஸ்ஸினின் சிங்கிள் 255 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்கள் பின் சக்கர பிரேக் பணிகளையும் மேற்கொள்கிறது.

இவை அனைத்தையும் தாண்டி, இந்த டிரயம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள் மோட்டர்சைக்கிளை ரூ.8,300 மாதத் தவணையில் பெறும் வகையில் கடனுதவி திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

டிரையம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள் இரு சக்கர வாகனத்தின் விலை 11.49 லட்சம் ரூபாயாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இதனை தற்போது அப்கிரேட் போனஸுடன் 10.99 லட்சம் ரூபாய்க்கு வாங்கலாம்.

English summary
Triumph Speed Triple Motorcycles are available at attractive prices this festive season. Customers upgrading to 1,000 cc class bikes, can get upgrade bonus of up to 50,000 rupees.
Story first published: Thursday, October 29, 2015, 14:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark