மார்ச் 12ல் புதிய ட்ரையம்ஃப் அட்வென்ச்சர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகமாகிறது

Written By:

வரும் 12ந் தேதி ட்ரையம்ஃப் நிறுவனத்தின் இரண்டு புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

கடந்த மாதம் நடந்த இந்திய பைக் வீக் திருவிழாவில் ட்ரையம்ஃப் XCx மற்றும் ட்ரையம்ஃப் XRx ஆகிய இரண்டு அட்வென்ச்சர் ரக பைக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Triumph Bikes
 

இந்த இரண்டு பைக்குகளிலும் இருப்பது ஒரே எஞ்சின்தான். ஆனால், வசதிகள், சிறப்பம்சங்களில் வேறுபாடுகள் கொண்டவை. இந்த இரு புதிய பைக்குகளும் வரும் 12ந் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று ட்ரையம்ஃப் தெரிவித்திருக்கிறது.

இந்த இரு பைக்குகளிலும் 93.66 எச்பி பவரையும், 79 என்எம் டார்க்கையும் அளிக்கும் 800சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக்குகளில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தரும் என ட்ரையம்ஃப் தெரிவிக்கிறது.

நவீன ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புதிய அட்வென்ச்சர் ரக பைக்குகள் இந்திய வாடிக்கையாளர்களை கவர வருகின்றன. ரூ.12 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Triumph Motorcycles recently showcased its Tiger XCx and XRx adventure motorcycles at the India Bike Week festival. Now the British based manufacturer has confirmed it will be launching both these motorcycles in India on 12th of March, 2015.
Story first published: Saturday, March 7, 2015, 11:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark