டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் பற்றிய விபரம்

Written By:

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஸ்பெஷல் எடிசன் மாடலை அறிமுகம் செய்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ் மாடலின் அடிப்படையிலான மேட் புளூ எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் வருகிறது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் அல்லாத மாடலிலும் கிடைக்கும். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மேட் ஃபினிஷ் மாடல்

மேட் ஃபினிஷ் மாடல்

மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நீல வண்ணத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் வருகிறது. மற்றபடி, இந்த மாடலில் மெக்கானிக்கல் அல்லது வடிவமைப்பு மாற்றங்களோ செய்யப்படவில்லை. இதற்கு முந்தைய ரக பைக்குகளுக்கும் இதற்கும் உள்ள இஞ்ஜினிலோ, செயல்திறனிலோ எந்த விதமான மாறுபாடுகளும் இருக்காது.

 இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 180 மேட் ப்ளூ பைக்கில், ஒற்றை சிலிண்டர் கொண்ட 177.4 சிசி இஞ்ஜினுடன் வருகிறது. இதன் ஏர்-கூல்ட் இஞ்ஜின் 17.03 ஹார்ஸ்பவரையும், உச்சபட்ச டார்க்காக 15.5 என் எம் டார்கையும் வெளியிடும் திறன் கொண்டுள்ளது. இதில், 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் உள்ளது.

 ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கில் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகின்றது. இதன் முன் சக்கரத்தில் 270 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட ரோட்டோ பெட்டல் டிஸ்க்குடனும், பின் சக்கரம்த்தில் 200 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட ரோட்டோ பெட்டல் டிஸ்க்கும் பொருத்தப்பட்டிருக்கிறது.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

இந்த டிவிஎஸ் மோட்டர்சைக்கிள் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் அனலாக் டாகோமீட்டர் கொண்டுள்ளது. நீல நிறத்தில் உள்ள டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரின் பின்புலம் குளுமையான உணர்வை வழங்குகிறது. இவை அனைத்தும், கார்பன் ஃபைபர் கௌளில் கச்சிதமாக அடக்கப்பட்டுள்ளது.

விலையில் கூடுதல்?

விலையில் கூடுதல்?

தற்போது, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ் மாடல் ரூ.87,282 (எக்ஸ் ஷோரூம், டெல்லி) விலையில் கிடைக்கிறது. ஆனால், இந்த புதிய அப்பாச்சி மேட் ப்ளூ மாடல் பைக்கானது, 1,500 முதல் 2,000 ரூபாய் வரை கூடுதலான விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. அத்துடன், அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடலிலும் இந்த மேட் புளூ எடிசன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
TVS Motors launch their Apache RTR 180 ABS model in an all-new Matte Blue Edition.
Story first published: Tuesday, October 13, 2015, 13:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark