டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியின் முதல் 300சிசி பைக் - ஸ்பை படங்கள்!

Written By:

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவானஎ புதிய புரோட்டோடைப் பைக் மாடலின் சோதனை ஓட்டங்கள் துவங்கியுள்ளன. ஜெர்மனியில், அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட அந்த பைக்கின் ஸ்பை ஷாட் படங்கள் பிரபல ஆட்டோமொபைல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் டிரேக்கன் கான்செப்ட் பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் இந்த பைக்கில் தென்படுகின்றன. இந்த புதிய பைக்கின் புரொஜெக்டர் ஹெட்லைட் டிரேக்கன் கான்செப்ட் போன்றே இருக்கிறது.

TVS BMW Bike
 

இந்த புதிய பைக் மாடல் 300சிசி மற்றும் 400சிசிக்கு இடையிலான ரகத்திலான எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. நேக்டு ஸ்டைல் கொண்ட இந்த புதிய பைக் மாடல் கேடிஎம் டியூக் 390 பைக்கிற்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

TVS BMW Bike Model
 

இந்த புதிய பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 40எச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும் என்று தெரிகிறது. சிங்கிள் ஹெட்லைட், அலாய் வீல்கள், மிச்செலின் டயர்கள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

Photo Credit: Visor Down

English summary
TVS-BMW first sub-500cc motorcycle has been caught testing in Germany. 
Story first published: Thursday, January 29, 2015, 14:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark