அரை மில்லியன் சாதனை... அப்படி என்னதான் இருக்கு டிவிஎஸ் ஜுபிடரில்...!!

By Saravana

விற்பனையில் 5 லட்சத்தை தொட்டு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது டிவிஎஸ் ஜுபிடர். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 18 மாதங்களில் இந்த சாதனையை படைத்திருக்கிறது.

முன்னணி ஸ்கூட்டர் மாடல்களில் இருக்கும் சில நடைமுறை பிரச்னைகளை களைந்து வெளியிடப்பட்டதால், இந்த சுதேசி ஸ்கூட்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கான காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. டிசைன்

01. டிசைன்

ஹோண்டா ஆக்டிவா சாயல் இருந்தாலும், சில முக்கிய மாற்றங்களுடன் தேர்வுக்கு சிறப்பான மாடலாக டிசைன் செய்துள்ளனர். மேலும், போட்டியாளர்களைவிட பல கூடுதல் வசதிகளையும், சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது. அவற்றை அடுத்த ஸ்லைடிலிருந்து தொடர்ந்து காணலாம்.

02. செயல்திறன் மிக்கது

02. செயல்திறன் மிக்கது

செயல்திறன் மிக்க எஞ்சின் இந்த ஸ்கூட்டரில் இருக்கிறது. அதாவது, 0- 96 கிமீ வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டிவிடும். வீகோ ஸ்கூட்டரில் இருக்கும் அதே 110சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் இருக்கிறது. இந்த எஞ்சின் 8 பிஎச்பி சக்தியையும், 8 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

03. மைலேஜ்

03. மைலேஜ்

மைலேஜ் ஜூபிடர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் சராசரியாக லிட்டருக்கு 45 கிமீ முதல் 50 கிமீ இடையில் மைலேஜ் தரும்.

04. பொருட்களுக்கான இடவசதி

04. பொருட்களுக்கான இடவசதி

பொருட்களுக்கு இடவசதி இருக்கைக்கு கீழே 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் வைப்பதற்கு போதிய இடவசதியை அளிக்கிறது.

05. மொபைல்போன் சார்ஜர்

05. மொபைல்போன் சார்ஜர்

இருக்கைக்கு கீழே மொபைல் சார்ஜர் வசதியும் உள்ளது. இதுவும் டிவிஎஸ் ஜுபிடரை வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கான காரணமாக இருக்கிறது.

06. பெட்ரோல் டேங்க் மூடி

06. பெட்ரோல் டேங்க் மூடி

பிற ஸ்கூட்டர் மாடல்களில் இருக்கையை திறந்து பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கிறது. ஆனால், டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரில் வெளிப்புறத்திலேயே பெட்ரோல் டேங்க் மூடி இருப்பதால், இருக்கையை திறக்க வேண்டியதில்லை.

07. பெட்ரோல் டேங்க்

07. பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க் 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

08. சஸ்பென்ஷன்

08. சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன் முன்புறம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஸ்பிரிங் லோடட் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

09. மேட் ஃபினிஷ் சக்கரங்கள்

09. மேட் ஃபினிஷ் சக்கரங்கள்

ஜூபிடர் சக்கரங்கள் வீகோ மற்றும் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே 12 இஞ்ச் அலாய் வீல்களுடன் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஜூபிடரில் அலாய் வீல்கள் கருப்பு நிறத்தில் மேட் பினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

10. இதர அம்சங்கள்

10. இதர அம்சங்கள்

எரிபொருள் குறைவதை எச்சரிக்கும் இன்டிகேட்டர், அதிக எரிபொருள் சிக்கனத்தை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலான ஈக்கோமீட்டர் ஆகிய வசதிகளுடன் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

11. ஹெட்லைட்

11. ஹெட்லைட்

ஜூபிடர் ஹெட்லைட் இரண்டு பைலட் லைட்டுகளுடன், ட்வின் சிட்டி லைட்டுகளும் குறிப்பிடத்தக்க அம்சம்.

12. பாஸ் லைட்

12. பாஸ் லைட்

அவசர சமயத்தில் எதிரில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை தருவதற்கான பாஸ் லைட் வசதிகொண்ட முதல் ஸ்கூட்டராக ஜூபிடரை கூறலாம். பின்புறத்தில் எல்இடி லைட்டுகள் கொண்ட டெயில் லைட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

 13. டர்னிங் ரேடியஸ் குறைவு

13. டர்னிங் ரேடியஸ் குறைவு

மார்க்கெட்டில் மிகக் குறைந்த டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவும் கூறலாம். இந்த ஸ்கூட்டரின் டர்னிங் ரேடியஸ் 1,910 மிமீ. இதன்மூலம், குறுகிய இடத்திலும் எளிதாக திருப்ப முடியும்.

14. விலை விபரம்

14. விலை விபரம்

சென்னையில் ரூ.52,115 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
TVS Motors has an array of products on offer in Indian market. They manufacture both motorcycles and scooters for its customers. Their most popular product currently is the TVS Jupiter scooter, which was launched 18 months ago. The Indian two-wheeler manufacturer has now achieved a milestone with this scooter.
Story first published: Saturday, May 16, 2015, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X