வெயிட், வெயிட்... நவம்பரில் வருகிறது புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200!!

By Saravana

டிவிஎஸ் நிறுவனம் சத்தமில்லாமல், அதிரடி காட்ட தயாராகி வருகிறது. வரும் நவம்பர் மாதம் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கை களமிறக்கி மாரக்கெட்டை கலக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த புதிய அப்பாச்சி 200 மிகச்சிறப்பான தேர்வாக இருக்கும். ஏனெனில், அப்பாச்சி குடும்ப வரிசையில் வந்தாலும் இது முழுக்க முழுக்க ஓர் புத்தம் புதிய மாடலாக இருக்கும் என்பதுடன், விலையும் தோதானதாக இருக்கும்.

டிரேக்கன் கான்செப்ட்

டிரேக்கன் கான்செப்ட்

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிரேக்கன் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய பைக் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வடிவமைப்பில் இப்போதுள்ள அப்பாச்சியை விட மிகச்சிறப்பானதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கில் லிக்யூடு கூல்டு 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக 20 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மோனோஷாக் அப்சார்பர், எஞ்சினுக்கு கீழே எக்சாஸ்ட் பைப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி லைட்டுகளுடன் கூடி மட்கார்டுகள் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

விற்பனை

விற்பனை

வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த புதிய பைக்குடன் மீண்டும் அதிரடி காட்ட டிவிஎஸ் தயாராகி வருகிறது.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

புதிய அப்பாச்சி 200 பைக் தவிர்த்து, அப்பாச்சி குடும்ப வரிசையில் புதிய 250சிசி பைக்கை அறிமுகம் செய்யவும் டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க விற்பனையை பெறுவதற்கு அந்த நிறுவனம் காய் நகர்த்தி வருகிறது.

Most Read Articles
English summary
TVS To Launch New Apache 200cc In Nov 2015.
Story first published: Friday, September 18, 2015, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X