டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!

Written By:

டிவிஎஸ் மோட்டார் தங்களின் ஸ்பெஷல் கோல்டு எடிஷன் 2015 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைவதை கொண்டாடும் வகையில், புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்
 

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ கோல்டு எடிஷன் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்துள்ளது. மேலும், 110 சிசி திறன் கொண்ட இஞ்ஜின், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. முதன் முறையாக, தங்கம் மற்றும் வெள்ளை நிறங்களிலான கலவை புதிய பொலிவை வழங்குகிறது.

ஸ்பெஷல் கோல்டு எடிஷன் 2015 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ மற்ற முந்தைய ரக பைக்குகளின் அம்சங்களுடன், தங்கம் மற்ற வெள்ளை நிறங்களிலான வடிவமைப்பு, ட்யூப்கள் இல்லாத டயர்கள், யூஎஸ்பி மொபைல் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகின்றது என டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கே.என்.ராதாகிருஷ்னன் தெரிவித்தார்.

வழக்கமான 109.77 சிசி இஞ்ஜினுடன் வரும் இந்த ஸ்பெஷல் கோல்டு எடிஷன் 2015 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக், ரூ.49,425 தமிழக எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

English summary
TVS Motor launches Special Gold Edition 2015 TVS StaR City+. Its launch coincides with the completion of one year launch of TVS StaR City+.
Story first published: Tuesday, October 13, 2015, 9:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark