டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் விளம்பரத்தில் தோன்றும் நடிகர் அமிதாப் பச்சன்

Written By:

டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுனத்தின் ஜுபிடர் ஸ்கூட்டர் விளம்பரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்றும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் முதல் முறையாக ஸ்கூட்டர் விளம்பரத்தில் தோன்றுகிறார். அவர் இதற்கு முன் வேறு எந்த இரு சக்கர விளம்பரத்திலும் தோன்றியதில்லை.

எல்லோராலும் மிகுந்த மதிப்புடன் நோக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனுடன் அமைந்த இந்த கூட்டணியால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக டிவிஎஸ் மோட்டர்ஸ் தலைமை அதிகாரி கே.என்.ராதாகிருஷ்னன் தெரிவித்தார்.

அதேபோல், டிவிஎஸ் நிறுவனத்துடன் உருவாகியுள்ள இந்த புதிய பந்தம் பெருமைக்குரிய விஷயமாகும் என அமிதாப் பச்சன் கூறினார்.

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் சிங்கிள்-சிலிண்டர் 109.7 சிசி இஞ்ஜினால் இயக்கப்படுகிறது. இது 7.88 ஹார்ஸ்பவர் மற்றும் உச்சபட்ச டார்காக 8 என்எம் டார்க்கை வெளியிடும் திறன் கொண்டுள்ளது.

ஜுபிடர் ஸ்கூட்டரின் எரிபொருள் திறனை மேம்படுத்த இண்டெலிஜெண்ட் இக்னிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பவர் மோட் மற்றும் எகோ மோட் என இரு டிரைவிங் ஆப்ஷன்களில் இயக்க கூடியதாக உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 62 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

இருக்கையை திறக்காமல், வெளிப்புறமாக எரிபொருள் நிரப்பும் வசதி, இரண்டு பக்கமும் ஹேண்டில் லாக், இருக்கைக்கு கீழே மொபைல் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் அதிக அளவில் பொருட்களை வைத்து கொள்ளும் இடவசதி, மெட்டல் பாடி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை இந்த ஜுபிடர் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

ஜுபிடர் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் ட்ரிம் வேரியண்ட் ரூபாய் 52,165 (எக்ஸ்-ஷோரூம் சென்னை) விலையில் கிடைக்கிறது. ஜுபிடர் இஃஜட்.எக்ஸ் ட்ரிம் வேரியண்ட் ரூபாய் 54,173 (எக்ஸ்-ஷோரூம் சென்னை) விலையில் கிடைக்கிறது.

ஜுபிடர் ஸ்கூட்டர்கள் டைட்டானியம் கிரே, ஸ்பார்க்ளிங் சில்வர், மிட்நைட் பிளாக், வால்கேனோ ரெட் மற்றும் ப்ரிஸ்டின் வைட் உள்ளிட்ட ஐந்து நிறங்களில் கிடைக்கின்றது.

இதோடு மட்டுமல்லாமல், டிவிஎஸ் அப்பாச்சி புதிய மேட் ப்ளூ எடிஷனிளும், ஸ்டார் சிட்டி + எக்ஸ்க்ளூசிவ் கோல்டு எடிஷன் நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த ஜுபிடர் ஸ்கூட்டர் விளம்பரத்தில் நடிகர் அமிதாப் பச்சன் ஸ்கூட்டரை இயக்குவது போல் காட்சிபடுத்தப்படவில்லை. மாறாக, டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்களை விளக்குவது போல் விளம்ப்ரம் அமைந்துள்ளது.

விளம்பரத்தின் வீடியோவை காண;

டிவிஎஸ் ஜுபிடர் விளம்பரத்தில் தோன்றும் அமிதாப் பச்சன்

English summary
TVS Motors has featured Amitabh Bachchan as Brand Ambassador for their Jupiter scooter. This Advertisement featuring Amitabh Bachchan is expected to attract more Customers for sure.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark