7 புதிய வண்ணங்களில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் அறிமுகம்!

Written By:

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, அவ்வப்போது கூடுதல் அம்சங்களை தனது ஸ்கூட்டர் மாடல்களில் சேர்த்து வருகிறது.

அந்தவகையில், தற்போது வீகோ ஸ்கூட்டரில் புதிய வண்ணங்களில் வெளியிட்டிருக்கிறது. டியூவல் டோன் ரெட், டியூவல் டோன் ஒயிட், வல்கனோ ரெட், ஸ்போர்ட்டி ஒயிட், மெர்குரி கிரே, மிட்நைட் பிளாக், கபுசினோ பிரவுன் ஆகிய 7 புதிய வண்ணங்களில் வீகோ கிடைக்கும்.

TVS Wego
 

இதுதவிர, கருப்பு நிற அலாய் வீல்கல், எல்இடி டெயில்லைட்டுகள், துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர் கார்டு ஆகியவையும் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் டிரம் பிரேக் மாடல் ரூ.50,410 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.53,079 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

English summary
TVS Wego is one of TVS Motors most popular scooters in Indian market. They have now introduced seven new and exciting colours, along with additional features as well.
Story first published: Friday, June 19, 2015, 16:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark