அடுத்து ஒரு அமெரிக்கன் பிராண்டில் வரும் புதிய க்ரூஸர் பைக்!!

Written By:

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் முதல் பிரிமியம் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களை தொடர்ந்து, இந்தியாவில் களமிறங்கும் மோட்டார்சைக்கிள் நிறுவனம் என்பதால், பைக் பிரியர்கள் மத்தியில் இந்த புதிய பிராண்டு ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

முதல் மாடல்

முதல் மாடல்

அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் மாடலாக ஒரு க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய யுஎம்- லோஹியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

ரகம்

ரகம்

350சிசி முதல் 500சிசி வரையிலான செக்மென்ட்டில் இந்த புதிய க்ரூஸர் மாடல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். மேலும், யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் க்ரூஸர் மாடல் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்டதாக வருகிறது.

அசெம்பிள்

அசெம்பிள்

உத்தரகாண்ட் மாநிலத்தில், மோட்டார்சைக்கிள்களை அசெம்பிள் செய்வதற்கான ஆலையை கட்டுவதற்கு யுஎம்- லோஹியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் இருசக்கர வாகனங்களை அசெம்பிள் செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.

முதலீடு

முதலீடு

புதிய ஆலை கட்டுமானத்திற்கும், வர்த்தகத்திற்காகவும் ரூ.100 கோடியை முதலீடு யுஎம்- லோஹியா கூட்டணி முதலீடு செய்ய இருக்கிறது. முதலில் மெட்ரோ நகரங்களில் டீலர்ஷிப்புகளை திறக்க முடிவு செய்துள்ளனர்.

பல மாடல்கள்

பல மாடல்கள்

அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், க்ரூஸர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதோடு, அடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல்களையும் யுஎம்- லோஹியா கூட்டணி காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக சவாலான விலையில் பல புதிய பிரிமியம் பைக் மாடல்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டை பிடிக்க இந்த கூட்டணி முடிவு செய்துள்ளது.

 
English summary
Indo-American duo will launch their first range of two-wheelers during 2016 Auto Expo. UM Motorcycles is most likely to introduce a single cruiser motorcycle during this period.
Story first published: Monday, September 28, 2015, 9:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark