வெஸ்பா எஸ்எக்ஸ்எல் மற்றும் விஎக்ஸ்எல் ஸ்கூட்டர்கள் அறிமுகம்- விபரம்

Written By:

வெஸ்பா நிறுவனத்தின் புதிய எஸ்எக்ஸ்எல் மற்றும் விஎக்ஸ்எல் ஆகிய இரு ஸ்கூட்டர்கள் மும்பையில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வெஸ்பா நிறுவனத்தின் புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும், இத்தாலியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் அலிசான்ட்ரோ டெல் பியரோ, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தார். கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

வெஸ்பா எஸ் ஸ்கூட்டரின் அடிப்படையில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக இவை இரண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்பம்சங்கள்

மறுவடிவமைப்பு பெற்ற முகப்பு, புதிய இருக்கை, 11 இன்ச் அலாய் வீல்கள், புதிய மீட்டர் கன்சோல் அமைப்பு, கூடுதல் அகலம் கொண்ட ட்யூப்லெஸ் டயர்கள், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் போன்றவை இந்த ஸ்கூட்டர்களின் சிறப்புகளாக இருக்கின்றன.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

வெஸ்பா எஸ்எக்எஸ்எல் மற்றும் விஎக்ஸ்எல் ஆகிய இரு மாடல்களும், 125சிசி மற்றும் 150சிசி என இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர்களில் இடம்பெற்றிருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.0 பிஎச்பி பவரையும், 10.06 என்எம் டார்க்கையும் வழங்கும். 150சிசி எஞ்சின் கொண்ட மாடலில் இடம்பெற்றிக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 11.6 பிஎச்பி பவரையும், 11.5 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 விலை விபரம்

விலை விபரம்

வெஸ்பா விஎக்ஸ்எல் 125சிசி: ரூ.77,308

வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 125சிசி: ரூ.81,967

வெஸ்பா விஎக்ஸ்எல் 150சிசி: ரூ.84,641

வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150சிசி: ரூ.88,696

அனைத்தும் புனே எக்ஸ்ஷோரூம் விலைகள்

English summary
Italian scooter specialist Vespa has launched an updated version SXL and VXL scooter models in India today.
Story first published: Tuesday, September 1, 2015, 18:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark