அட்டகாசமான இரட்டை வண்ணங்களில் இப்போது யமஹா ஆல்ஃபா!

Written By:

அட்டகாசமான புதிய இரட்டை வண்ணக் கலவையில் இப்போது யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே 5 ஒற்றை வண்ணங்கள் கொண்ட மாடல்களில் யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய இரட்டை வண்ண கலவை கொண்ட மாடல்கள் சிறிது கூடுதல் விலை கொண்டதாக வந்திருக்கிறது.

Yamaha Scooter
  

ராக்கிங் ரெட், பீமிங் புளூ மற்றும் க்ளீமிங் கோல்டு ஆகிய இரட்டை வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர்கள் ரூ.49,939 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரே வண்ணத்திலான யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர்கள் ரூ.48,936 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டரில் 113சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 7 எச்பி பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

English summary
Yamaha Alpha was launched a while ago in Indian markets, they have now provided this scooter with an update. They will offer three new dual colour options for this scooter in India.
Story first published: Saturday, August 1, 2015, 12:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark