2 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் யமஹாவின் புதிய எலக்ட்ரிக் பைக்!

Written By:

யமாஹா நிறுவனம் புதிய 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எலெக்ட்ரிக் கான்செப்ட் பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. முழுமையாக மின்சாரத்தால் இயங்கும் இந்த புதிய பைக்கை, வரும் 28 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் டோக்கியோ மோட்டர் ஷோ நிகழ்ச்சியில், யமாஹா மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

தற்போது, வெளியாக உள்ள யமாஹா பீஈஎஸ் 2 கான்செப்ட் பைக், 2013-ல் வெளியான பீஈஎஸ் 1 எலக்ட்ரிக் பைக்கை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பீஈஎஸ் 1 எலக்ட்ரிக் பைக்கில், எஞ்சின் ஆற்றல், ஒரு சக்கரத்திற்கு மட்டுமே அளிக்கப்படும். இந்த பீஈஎஸ் 2 கான்செப்ட் பைக்கின் இயக்கமானது மின் மோட்டார்களின் ஆற்றல் இரு சக்கரங்களுக்கும் கிடைக்கும்.

அடுத்த ஆண்டு பீஈஎஸ் 2 பைக் வெளிவரும் என தெரிகிறது. பீஈஎஸ் 1 எலக்ட்ரிக் பைக் மிகவும் வருங்கால நோக்கு மிகுதியான தோற்றம் கொண்டிருந்தது. ஆனால், பீஈஎஸ் 2 பைக், நாம் அன்றாடம், சாதாரண சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஸ்ட்ரீட் பைக்கை போல் காட்சியளிக்கிறது.

புதிய யமஹா எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

பீஈஎஸ் 2 கான்செப்ட் பைக், யமாஹா ஸ்மார்ட் பவர் மாட்யூல் என அழைக்கப்படும் கழற்றக்கூடிய பேட்டரி பேக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு பைக்கிற்கு பொலிவை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், அது பைக்கின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு உறுப்பாகவும் உள்ளது.

புதிய யமஹா எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

இந்த பீஈஎஸ் 2 மோனோகாக் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில், இருக்கை, வால் பகுதி மற்றும் பேட்டரி பகுதி ஒரே பகுதியாக கோர்க்கப்பட்டிருக்கிறது. தனித்தனி பாகங்களாக இருப்பதை காட்டிலும், இப்படிப்பட்ட மோனோகாக் கட்டமைப்பினால், பைக்கிற்கு அதிக நிலைத்தன்மையும், உறுதிதன்மையும் கிடைக்கிறது.

புதிய யமஹா எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

இந்த பீஈஎஸ் 2, பைக் 2 வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதன் முன் சக்கரத்தின் ஹப் பகுதியில், முன் சக்கரத்தை இயக்கும் ஒரு சிறிய மோட்டரும் உள்ளது. பீஈஎஸ் 2 பைக்கின் முன்னிலும், தாழ்விலும் உள்ள கூடுதல் எடையானது, புவியீர்ப்பு மையபடுத்துதல் மற்றும் சரியான எடையின் விநியோகத்திற்கு உதவுகிறது. எனினும், முன்பகுதியில் கூட்டப்படும் எடையால், வேறு சில அம்சங்களில் சமரசம் செய்யவேண்டி இருக்கலாம் என தெரிகிறது.

புதிய யமஹா எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

இது தயாரிப்பு நிலைக்கு வர கொஞ்சம் செலவு கூடுதலாக இருக்கும் என கருதப்பட்டாலும், தற்போது வரை கான்செப்ட் நிலையில் தான் உள்ளது. இந்த பீஈஎஸ் 2 பைக்கை, 2016-ஆம் ஆண்டுவாக்கில் உற்பத்தி செய்வதற்கான வாக்குறுதியை யமாஹா நிறுவனம் எப்படி நிறைவேற்ற உள்ளது என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், யமாஹா பீஈஎஸ் 2 பைக்கின் அம்சங்கள் அனைத்தும் ஈர்க்கும் வகையில் உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

புதிய யமஹா எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

பீஈஎஸ் 2 பைக், முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் பைக்கல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் லைவ்வயர் கான்செப்ட் பைக்குகள் 2014-ஆம் ஆண்டு முதலே உள்ளன.

 
English summary
Yamaha debuts all-electric, two-wheel-drive concept bike at Toyko Motor Show. This Yamaha PES2 concept bike is based on the PES1 electric bike.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark