சென்னையில் புதிய யமஹா ஆலை: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!

Written By:

சென்னை அருகே வல்லம் வடகலில் அமைக்கப்பட்டிருக்கும் யமஹா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகன தயாரிப்பு ஆலையை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், இந்த புதிய ஆலை திறப்பு விழாவும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், யமஹா இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஹிரோகி பியூஜிட்டா உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Yamaha Fascino
 

சுமார் 177 ஏக்கர் பரப்பளவில், அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய இருசக்கர வாகன தயாரிப்பு ஆலை மூலமாக இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் வெகுவாக மேம்படும்.

ஆண்டுக்கு 4.5 லட்சம் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக செயல்பட உள்ளது. வரும் 2018ம் ஆண்டில் இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 1.8 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவில் உயர்த்தப்படும்.

2018ம் ஆண்டில் இந்த ஆலையில் 3,000 பணியாளர்களை கொண்டதாக இருக்கும். முதல்முறையாக, யமஹா நிறுவனத்தின் ஆலையின் வளாகத்திலேயே, உதிரிபாக சப்ளையர்களின் ஆலைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

யமஹா சல்யூட்டோ 125, ஆல்ஃபா, ஃபேஸினோ, ரே மற்றும் ரே இசட் மாடல்கள் இந்த புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், சூரஜ்பூர், ஹரியானா மாநிலம் பரீதாபாத் ஆலைகளை தொடர்ந்து, இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது யமஹா வாகன ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Inauguration of Yamaha Chennai facility was done by Tamil Nadu, Chief Minister, J. Jayalalithaa. Also present was Hiroaki Fujita, Chairman, Yamaha India and several other senior dignitaries.
Story first published: Friday, September 11, 2015, 16:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark