புதிய வண்ணங்களில் யமஹா எஃப்இசட்- எஸ் மற்றும் பேஸர் பைக்குகள்!

Written By:

புதிய வண்ணங்களில் யமஹா எஃப்இசட்- எஸ் மற்றும் பேஸர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த இரு மாடல்களின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் எஞ்சின் கொண்ட மாடல்களில் மட்டும் இந்த புதிய வண்ணங்கள் கிடைக்கும். விலை, வண்ணங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

யமஹா பேஸர் [FI மாடல்]

யமஹா பேஸர் [FI மாடல்]

ஸ்னோஸ்டார்ம் ஒயிட், ரேவின் பிளாக் மற்றும் வல்கனோ ரெட் ஆகிய மூன்று புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

யமஹா எஃப்இசட்- எஸ் [FI மாடல்]

யமஹா எஃப்இசட்- எஸ் [FI மாடல்]

தற்போது யமஹா எஃப்இசட்- எஸ் ப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல் வைப்பர் பிளாக், அலிகேட்டர் க்ரீன், ஷார்ப் ஒயிட் மற்றும் வோல்ப்ஃப் க்ரே ஆகிய நான்கு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

யமஹா எஃப்இசட்- எஸ் - ரூ.82.159

யமஹா பேஸர் - ரூ.87,305

இரண்டும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

எஞ்சின்

எஞ்சின்

இந்த இரு பைக் மாடல்களிலும் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த இரு மாடல்களிலும் 13 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 149சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இவை ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டவை.

 
English summary
Yamaha motors has introduced the FZ-S and Fazer with new colour options in India.
Story first published: Thursday, October 1, 2015, 9:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark