யமஹா எம்டி 03 மாடல்... சமீபத்தில் வந்த ஆர்3 பைக்கின் நேக்டு ஸ்டைல் மாடல்!

By Saravana

இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹா ஆர்3 பைக்கின் நேக்டு பாடி ஸ்டைல் கொண்ட யமஹா எம்டி03 பைக்கின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

யமஹா ஆர்3 பைக்குடன் சேர்த்து சோதனை செய்யப்பட்ட இந்த புதிய மாடல், விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ட்ரீட் ஃபைட்டர்...

ஸ்ட்ரீட் ஃபைட்டர்...

யமஹா ஆர்3 பைக்கின் ஃபேரிங் பேனல்களை உருவிவிட்டு, நேக்டு ஸ்டைல் மாடலாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஒற்றை ஹெட்லைட், ஹெண்டில்பார் உள்ளிட்ட சில பாகங்கள் புதியது.

ஒரே உதிரிபாகங்கள்

ஒரே உதிரிபாகங்கள்

யமஹா ஆர்3 பைக்கின் நேக்டு வெர்ஷனாக வரும் இந்த புதிய பைக் மாடலின் சேஸீ, பிரேக் சிஸ்டம், ஸ்விங் ஆர்ம், ஷாக் அப்சார்பர், எஞ்சின் போன்றவற்றில் மாற்றம் இல்லை. பல உதிரிபாகங்களை இரு பைக்குகளும் பங்கிட்டுக் கொள்ளும்.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

சமீபத்தில் இந்தியாவில் வந்த யமஹா ஆர்3 பைக்கில் இருக்கும் அதே இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சினுடன் வர இருக்கிறது. அதிகபட்சமாக 40.5 எச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வழங்கும். அதே 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக, இந்த புதிய பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

யமஹா ஆர்3 பைக்கைவிட ரூ.25,000 வரை குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என நம்பலாம்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

கேடிஎம் டியூக் 390, டிஎஸ்கே பெனெல்லி டிஎன்டி 300, கவாஸாகி இசட்250 மற்றும் விரைவில் வர இருக்கும் ஹயோசங் ஜிடி250என் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Yamaha recently launched its YZF-R3 motorcycle in India and has promise too soon introduce new models. For a while now they have been concentrating on their scooter segment in the country.
Story first published: Saturday, August 29, 2015, 15:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X