300சிசி ரகத்தில் புத்தம் புதிய பைக்கை களமிறக்கும் யமஹா!

Written By:

இந்தியாவில் பல புதிய பைக் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், ஒரு புதிய 300சிசி பைக்கை களமிறக்க முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள யமஹா ஆர்15 மாடல் போன்றே இந்த புதிய மாடலும் பெரும் வெற்றி பெறும் அந்த நிறுவனம் நம்பிக்கை வைத்திருக்கிறது. யமஹாவின் இந்த புதிய 300சிசி பைக் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நேக்டு ஸ்டைல் மாடல்

நேக்டு ஸ்டைல் மாடல்

யமஹா எம்டி 320 மாடல்தான் இந்தியா வர இருக்கிறது. யமஹா ஒய்இசட்எஃப் ஆர்-3 மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் நேக்டு பாடி ஸ்டைல் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

யமஹா எம்டி320 பைக்கில் 2 சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 41.40 எச்பி பவரையும், 26.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

முக்கிய பாகங்கள்

முக்கிய பாகங்கள்

யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக்கின் எஞ்சின், சஸ்பென்ஷன், பிரேக் சிஸ்டம் போன்றவற்றை இந்த புதிய நேக்டு ஸ்டைல் பைக் பகிர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், ஃபேரில் பேனல் இல்லாமல் இருப்பதால், எடையும் சிறிது குறையும்.

அறிமுகம்

அறிமுகம்

முதலில் இந்த பைக்கின் ஃபேரிங் பேனல்கள் கொண்ட யமஹா ஆர்3 பைக் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த புதிய மாடலை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

 
English summary
At the upcoming 2016 Auto Expo, Yamaha is going to launch its all-new naked street motorcycle. It will be named as MT-320 and is based on Yamaha's YZF-R3 motorcycle.
Story first published: Saturday, July 11, 2015, 10:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark