இந்தியாவில் புதிய 150சிசி ஸ்கூட்டரை களமிறக்கும் யமஹா... பரபரப்பு!

Written By:

செயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்த யமஹா, இப்போது அதே அனுபவத்தை இந்திய ஸ்கூட்டர் விரும்பிகளுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, புதிய 150சிசி ஸ்கூட்டர் ஒன்றை சர்ப்ரைஸாக இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக புதிய 150சிசி ஸ்கூட்டர் மாடலை யமஹா இந்தியா நிறுவனம் சமீபத்தில் இறக்குமதி செய்துள்ளது. இது சவுபா என்ற ஏற்றுமதி, இறக்குமதி புள்ளிவிபர இணையதளம் மூலமாக உறுதியாகியுள்ளது.

மாடல் விபரம்

மாடல் விபரம்

யமஹா எக்ஸ்சி155 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல், வெளிநாடுகளில் யமஹா மெஜஸ்டி எஸ் மற்றும் மெஜஸ்டி எஸ்மேக்ஸ் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விரைவாக துண்டு போட்டு முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதில் யமஹா இந்தியா நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

டிசைன்

டிசைன்

அதிசக்திவாய்ந்த ஸ்கூட்டர் என்பதுடன், வழக்கத்திற்கு மாறாக மிக ஸ்டைலான டிசைன் கொண்டதாக இந்த ஸ்கூட்டர் இருக்கும். குறிப்பாக, இந்த ஸ்கூட்டரின் முகப்பும், பின்புறமும் இளைஞர்களை கவரும் விதத்தில் மிக ஸ்டைலாக இருக்கும்.

சக்திவாய்ந்த எஞ்சின்

சக்திவாய்ந்த எஞ்சின்

புதிய யமஹா எக்ஸ்சி155 ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரை அளிக்க வல்ல, 155சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். சிவிடி கியர்பாக்ஸ் கொண்டது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த ஸ்கூட்டரில் 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கும். 149 கிலோ எடை கொண்ட ஸ்கூட்டர் என்பதால், ஆண்களுக்கான மாடலாகவே இது நிலைநிறுத்தப்படும்.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலில், முன்புறத்தில் 267மிமீ டியூவல் பிஸ்டன் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 245மிமீ சிங்கிள் பிஸ்டன் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது. 88.9 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

டயர்கள்

டயர்கள்

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் 120/70-13 டயரும், பின்புறத்தில் 130/70-13 டயரும் பொருத்தப்பட்டிருக்கும். இதேபோன்று, முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஷாக் அப்சார்பர் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொண்டதாக இருக்கும்.

 இதர முக்கிய அம்சங்கள்

இதர முக்கிய அம்சங்கள்

அனலாக் மற்றும் மின்னணு திரையுடன் அமைக்கப்பட்டிருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இருக்கைக்கு கீழே 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி, எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் என கலக்கலான அம்சங்களை கொண்டுள்ளது.

 சொகுசு

சொகுசு

சொகுசான பயண அனுபவத்தையும், அதிக செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வரும் இந்த புதிய ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் என்று நம்பலாம். இந்த புதிய ஸ்கூட்டர் குறித்து யமஹா இந்தியா நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை இல்லை.

 
English summary
According to sources, Japanese two wheeler manufacturer Yamaha is planning to launch new 150cc scooter in India.
Story first published: Monday, June 29, 2015, 12:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark