2015 யமஹா ஆர்1 மற்றும் ஆர்1எம் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!

By Saravana

2015ம் ஆண்டு மாடல் யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு தயாராகிவிட்டன. யமஹா இந்தியா நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் இந்த இரு பைக்குகள் குறித்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் கவாஸாகி நிறுவனம் தனது எச்2 சூப்பர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தநிலையில், யமஹா நிறுவனமும் தனது புதிய சூப்பர் பைக் மாடல்களின் தகவல்களை இந்தியர்களை பிரகடனப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக சூப்பர் பைக்குகளுக்கான புதிய பாதையை வகுத்த யமஹா ஆர்1 பிராண்டில் வந்திருக்கும் இந்த புதிய மாடல்கள் குறித்த முழுமையான தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

சூப்பர் பைக் நாமதேயம்

சூப்பர் பைக் நாமதேயம்

இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கான பெரிய வரவேற்பு எதுவும் இல்லாத காலத்தில், 2007ம் ஆண்டு யமஹாவின் இந்த ஆர்1 பைக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்தது. யமஹா ஆர்1 சூப்பர் பைக் வந்த பின்புதான் பல நிறுவனங்கள் தங்களது சூப்பர் பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டத் துவங்கின.

புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில்தான் இந்த புதிய 2015 யமஹா ஆர்1 மற்றும் ஆர்1 எம் ஆகிய இரண்டு சூப்பர் பைக் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், யமஹா ஆர்1 சூப்பர் பைக் சாதாராண சாலைகளிலும் ஓட்டுவதற்கான தகவமைப்புகளையும், யமஹா ஆர்1 எம் சூப்பர் பைக் ரேஸ் டிராக்குகளில் மட்டுமே ஓட்டுவதற்கான அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

இரு மாடல்களிலும் 197 எச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 998சிசி 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொண்டது.

எஞ்சின் ஸ்பெஷல்

எஞ்சின் ஸ்பெஷல்

முந்தைய மாடலின் எஞ்சினிலிருந்து க்ராஸ்ப்ளேன் கிராங்க்சாஃப்ட்டை இந்த புதிய மாடலின் எஞ்சினிலும் பயன்படுத்தியுள்ளனர். பழைய ஆர்1 மாடலைவிட இந்த புதிய மாடல் 19 பிஎஸ் கூடுதல் சக்தியை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக் மாடல்களிலும் டைட்டானியம் கனெக்டிங் ராடுகளும், ஃபோர்ஜ்டு அலுமினியம் பிஸ்டன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மீட்டர் கன்சோல்

டிஜிட்டல் மீட்டர் கன்சோல்

டச்ஸ்கிரீன் கொண்ட மீட்டர் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் கன்சோல் மூலம் வண்டியின் வேகம், எஞ்சின் சுழல் வேகம், எரிபொருள் அளவு, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். ரேஸ் டிராக்கில் ஓட்டும்போது தேவைப்படும் கூடுதல் தகவல்களையும் இந்த மீட்டர் கன்சோல் மூலம் பெறலாம்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இந்த அதிவேக பைக்கை இந்தியர்கள் பாதுகாப்பாக கையாளும் விதத்தில், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்லைடு கன்ட்ரோல், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் ஓலின்ஸ் ரேஸிங் ஃபோர்க்குகள் உள்ளதால், அதிக நிலைத்தன்மையை வழங்கும். வளையும்போது வண்டி அபாயகரமாக சாய்வது குறித்து எச்சரிக்கும் வசதி, ரேஸ் டிராக்கின் ஒரு சுற்றை எவ்வளவு நேரத்தில் கடந்தோம் என்பது உள்ளிட்ட தகவல்களை பெறும் வசதிகள் உள்ளன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

2015 யமஹா ஆர்1 பைக் ரேஸிங் புளூ, ரேஸிங் ரெட் ஆகிய வண்ணங்களிலும், யமஹா ஆர்1 எம் சூப்பர் பைக் சில்வர் புளூ கார்பன் என்ற ஒரேயொரு வண்ணத்திலும் கிடைக்கும் என்று யமஹா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

பல இந்தியர்கள் கையில் விளையாடி வரும் யமஹா ஆர்1 பிராண்டில் வந்திருக்கும் இந்த புதிய பைக்கும் தோற்றம், செயல்திறன் போன்றவற்றில் மட்டுமல்ல, விலையிலும் டோணியின் கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கை மறக்கச் செய்யும் விலையில் வந்திருக்கிறது. ஆம், யமஹா ஆர்1 பைக் ரூ.22.34 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், யமஹா ஆர்1 எம் பைக் ரூ.29,43 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha #auto news
English summary
Japanese two-wheeler manufacturer, Yamaha had showcased its latest superbike at 2015 EICMA. The R1 is one of the best superbikes and they are finally offering both R1 and R1M to Indian buyers.
Story first published: Monday, April 13, 2015, 10:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X