யமஹா சூப்பர் பைக்குகள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகிறது

Written By:

இந்தியாவில் விற்கபட்ட தங்களின் ஒய்இசட்எஃப்-ஆர்1 மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்1எம் உள்ளிட்ட சூப்பர் பைக்குகளை யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் ரீகால் செய்கின்றது.

விற்கபட்ட வாகனங்கள், கோளாறு காரணமாக தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் ரீகால் செய்யபடுவது வழக்கமான நடவடிக்கையாக உள்ளது.

அந்த வகையில், யமஹா நிறுவனத்தின் சார்பாக இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு விற்கபட்ட ஒய்இசட்எஃப்-ஆர்1 மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்1எம் உள்ளிட்ட சூப்பர் பைக்குகளில், ஒன்பது சூப்பர் பைக்குகளை யமஹா ரீகால் செய்கின்றது.

ஒய்இசட்எஃப்-ஆர்1 மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்1எம் உள்ளிட்ட சூப்பர் பைக்குகள் கோளாறுகள் மிகுந்த கியர்பாக்ஸ்களால் ரீகால் செய்யபடுகிறது. ஆக்ரோஷமான முறையில் முதல் மற்றும் இரண்டாவது கியரில் இயக்கும் போது, இந்த வகையிலான சில சூப்பர் பைக்குகள் திடீரென்று நின்று விடுவதாக யமஹா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் முக்கிய பிரச்னை, அதன் பாகங்களின் வலிமையை பொருத்து உள்ளது. கியர் குறுக்கீட்டால் மூன்றாவது மற்றும் நான்காவது கியரிலும் இந்த பிரச்னை நிகழும் வாய்ப்புகள் உள்ளது.

ஒய்இசட்எஃப்-ஆர்1 மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர் பைக்குகளாக உள்ள நிலையில், இத்தகைய பைக்குகளின் பெரும்பாலான உரிமையாளர்கள் இவற்றை ரேஸ் டிராக்குகளில் இயக்க விரும்புவது வழக்கம். இதனால் கியர்பாக்ஸிர்குள் சிக்கலகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

தற்போது வரை, 2 ஒய்இசட்எஃப்-ஆர்1எம் மாடல் சூப்பர் பைக்குகளும், 7 ஒய்இசட்எஃப்-ஆர்1 சூப்பர் பைக்குகளும் விற்கபட்டுள்ளது. இந்த ரீகால் பிரச்னை தொடர்பாக, டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு, இதற்கான தீர்வுகள் காண்பார்கள் என அறிவிக்கபட்டிருக்கிறது.

yamaha-yzf-r1-and-yzf-r1m-superbikes-are-recalled-in-india

கோளாறுகள் கொண்ட கியர்பாக்ஸ்கள், இந்த 9 சூப்பர் பைக்குகளிலும் யமஹா நிறுவனத்தால் இலவசமாக மாற்றி தரப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், ஒய்இசட்எஃப்-ஆர்1 மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்1எம் சூப்பர் பைக்குககளில், இந்த கியர்பாக்ஸ் பிரச்னை கொண்ட வாடிக்கையாளர்களும், யமஹா டீலர்ஷிப்களை அனுகும் படி கேட்டு கொள்ளபடுகின்றனர்.

கியர்பாக்ஸ்களை மாற்றுவதற்கு சற்று தாமதம் ஆகும். இயங்காத நிலையில் பிரச்னைகள் உடைய கியர்பாக்ஸ்கள் கொண்டுள்ள சூப்பர்பைக்குகளை வைத்திருப்பதை காட்டிலும், அதை உடனே சரி செய்து இயங்கும் நிலையில் வைத்திருப்பது தான் வாடிக்கையாளர்களுக்கு லாபகரமான விஷயமாகும்.

English summary
Yamaha Motors India has recalled nine units of the YZF-R1 and YZF-R1M superbikes. These superbikes were introduced in Indian market and sold during 2015. The Models of both the YZF-R1 and YZF-R1M superbikes are being recalled, due to faulty gearbox.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark