ஆச்சரியம்... சாதாரண இருக்கையுடன் யமஹா ஆர்15 பைக் அறிமுகம்!

Written By:

சாதாரண இருக்கையுடன் கூடிய யமஹா ஆர்15 பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. யமஹா ஆர்15 எஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் ஏற்கனவே இருந்த யமஹா ஆர்15 வெர்ஷன் 1.0 மாடலைப் போலவே உள்ளது.

ஸ்பிளிட் இருக்கைகள் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் யமஹா ஆர்15 பைக்கின் வெர்ஷன் 2.0 விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், மீண்டும் பழைய யமஹா ஆர்15 தோற்றத்திலான மாடல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

ஏற்கனவே இருந்த சாதாரண இருக்கை கொண்ட மாடலில் பின்புறம் அமர்ந்து செல்பவர்க்கு வசதியான இருக்கை அமைப்பு இருந்தது. இதற்கு மார்க்கெட்டில் இன்னமும் டிரான்ட் இருப்பதை கருதியே புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது.

விற்பனை

விற்பனை

இனி யமஹா ஆர்15 பைக் வெர்ஷன் 2.0 மாடலிலும், ஆர் 15 எஸ் மாடலிலும் கிடைக்கும். வெவ்வேறு வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த இரு மாடல்களையும் விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

 வேறுபாடு

வேறுபாடு

யமஹா ஆர்15 எஸ் மாடலில் சாதாரண இருக்கையை தவிர்த்து, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கலரிலும் கிடைக்கும். இதன்மூலமாக, ஆர்15 வெர்ஷன் 2.0 மாடலிலிருந்து புதிய மாடல் எளிதாக வேறுபடுத்த முடியும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

புதிய யமஹா ஆர்15 எஸ் பைக் டிராக் ஒயிட், அட்ரீனலின் ரெட் மற்றும் ஸ்பார்க் க்ரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். முந்தைய மூன்று ஸ்லைடுகளில் உள்ள படங்களை காண்க.

விலை

விலை

புதிய யமஹா ஆர்15 எஸ் பைக் ரூ.1.14 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
English summary
Main reason for the launch of Yamaha YZF-R15 S is Indian demand for comfortable sportsbike. The single seat on offer on this model is more comfortable for long rides, both for rider and pillion.
Story first published: Friday, September 18, 2015, 11:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark