யமஹா ஆர்-3 பைக்கிற்கு இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக்கிற்கான விருது!

Written By:

இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த பைக்கிற்கான விருதை யமஹா ஆர்-3 வென்றுள்ளது.

எந்த ஒரு நல்ல தயாரிப்புக்கும், விருதுகள் கிடைப்பது நல்ல விஷயம் தான். விருதுகள் நல்ல பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 பைக் வென்ற விருது குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விருது பற்றி...

விருது பற்றி...

ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் மோட்டார்சைக்கிள்களில் சிறந்ததை தேர்ந்து எடுத்து, அவற்றில் ஒரு பைக்கிற்கு இந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் என்ற மிக பெருமைமிக்க விருது வழங்கபடுகிறது.

வடிவமைப்பு (டிசைன்), விலை, வசதிகள், பாதுகாப்பு, தொழில்நுட்ப புதுமைகள் மற்றும் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கபடுகிறது.

நடுவர்கள் பற்றி...

நடுவர்கள் பற்றி...

ஆட்டோமொபைல் துறை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்களும், இத்துறையை சேர்ந்த பல்வேறு பத்திரிக்கையாளர்களும் இந்த விருதை தீர்மாணிக்கும் நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

பிற போட்டி மோட்டார்சைக்கிள்கள்;

பிற போட்டி மோட்டார்சைக்கிள்கள்;

இந்த விருதை வென்ற யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 பைக்கிற்கு, ஹோண்டா சிபிஆர்650எஃப் மற்றும் டிஎஸ்கே பெனெல்லி 300 மாடல் மோட்டார்சைக்கிளும் முக்கிய போட்டி போட்டி மோட்டார்சைக்கிள்களாக விளங்கியது.

ஒய்இசட்எஃப்-ஆர் 3 அறிமுகம்...

ஒய்இசட்எஃப்-ஆர் 3 அறிமுகம்...

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 2015-ல் தான் அறிமுகம் செய்யபட்டது.

விற்கப்டும் விதம்;

விற்கப்டும் விதம்;

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 பைக், இந்திய சந்தைகளில் சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட் என்ற வடிவத்திலேயே வழங்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 பைக், 321 சிசி இன்லைன் 2- சிலிண்டர்கள் உடைய லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

திறன்;

திறன்;

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 பைக்கின் இஞ்ஜின் 41.43 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 29.6 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த பைக், அதிகபடியாக ஒரு மணி நேரத்திற்கு, 150 கிலோமீட்டருக்கும் கூடுதலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

இல்லாத விஷயம்;

இல்லாத விஷயம்;

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 மோட்டார்சைக்கிளில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் தேர்வு முறையில் கூட வழங்கபடுவதில்லை.

ஜார்ஜ் லாரன்ஸோவுடனான நிகழ்ச்சி...

ஜார்ஜ் லாரன்ஸோவுடனான நிகழ்ச்சி...

யமஹா நிறுவனம், தங்களின் ஒய்இசட்எஃப்-ஆர் 3 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களுக்கு என பிரத்யேக நிகழ்ச்சி நடத்தியது.

ஒய்இசட்எஃப்-ஆர் 3 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களில் இருந்து, 30 பேர் தேர்வு செய்யபட்டனர். இப்படி தேர்வு செய்யபட்டவர்கள் அனைவருக்கும் நொய்டாவில் உள்ள புத் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில், ரேசிங் செய்யும் வாய்ப்பு வழங்கபட்டது.

மேலும், 2015 மோடோ ஜிபி சேம்பியன் ஜார்ஜ் லாரன்ஸோவுடன், ரேசிங் டிராக்கில் நேரம் செலவிடும் வாய்ப்பும் வழங்கபட்டது.

விலை;

விலை;

முழுவதுமாக பொலிவுகூட்டபட்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர் 3 ஸ்போர்ட்ஸ்பைக், 3.25 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Yamaha YZF-R3 Motorcycle has won the prestigious Indian Motorcycle Of The Year 2016 Award. Yamaha is offering the YZF-R3 motorcycle in India as a Completely Knocked Down unit. This Yamaha YZF-R3 sportbike was launched in India during August 2015. Full-faired Yamaha YZF-R3 sportbike is priced at Rs. 3.25 lakh ex-showroom (Delhi).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark