யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

Written By:

யமஹாவின் புதிய ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக் நொய்டாவில் உள்ள மோட்டார் பந்தய களத்தில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டு விதமான வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புதிய யமஹா ஆர்3 பைக் செயல்திறனில் மிரட்டலாக இருக்கும் என இளைஞர்களை உசுப்பேற்றியிருக்கிறது யமஹா.

வடிவம்

வடிவம்

புதிய யமஹா ஆர்3 பைக் 2,090மிமீ நீளமும், 720மிமீ அகலமும், 1,135மிமீ உயரமும் கொண்டது. இந்த பைக் 1,380மிமீ வீல் பேஸும், 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் கொண்டது. 169 கிலோ எடை கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 321சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக, இந்த எஞ்சின் 41.42 எச்பி பவரையும், 29.6 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பும் இருக்கும். சர்வதேச சந்தையில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் வழங்கப்படவில்லை.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

மிட்நைட் பிளாக் மற்றும் ரேஸிங் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த புதிய யமஹா ஆர்3 பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை

விலை

ரூ.3.25 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. நாட்டின் இதரப் பகுதிகளில் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

  
English summary
Yamaha has launched its YZF-R3 sportsbike in India on 11th of August, 2015 at the Buddh International Circuit. It is currently available only in two colour options Midnight Black and Racing Blue.
Story first published: Tuesday, August 11, 2015, 12:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark