யுவராஜ்சிங் ஆலோசனையில் உருவான புதிய கஸ்டமைஸ் பைக்!

Posted By:

கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டிசைன் தாத்பரியங்கள் கொண்ட புதிய கஸ்டமைஸ் பைக் மாடல் இந்திய பைக் வீக் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வரும் 20 மற்றும் 21 தேதிகளில் கோவாவிலுள்ள வகடர் என்ற இடத்தில் மூன்றாவது இந்திய பைக் வீக் திருவிழா நடைபெற இருக்கிறது. நாடுமுழுவதும் இருந்து சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

India Bike Week
 

இந்த நிலையில், இந்த திருவிழாவிற்கு வலு சேர்க்கும் விதமாக, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்பட்ட புதிய கஸ்டமைஸ் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவரே நேரடியாக வந்து இந்த பைக்கை அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

'YOUWECAN X12' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கஸ்டமைஸ் பைக், கேடிஎம் பைக்கின் அடிப்படையில் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலை ஆட்டோலோக் என்ற வாகன கஸ்டமைஸ் நிறுவனம் நிறுவனம் டிசைன் செய்து கொடுத்திருக்கிறது.

YOUWECAN X12 தவிர, ஆட்டோலோக் நிறுவனத்தின் இதர கஸ்டமைஸ் மாடல்களும் இந்திய பைக் வீக் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும், பல பைக் மாடல்களுக்கான சிறப்பு பாடி கிட்டையும் ஆட்டோலாக் நிறுவனம் காட்சிக்கு வைக்க இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஸ்பான்சர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருப்பதுடன், பார்வையாளர்கள் வருகையும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Indian cricketer, Yuvraj Singh is known for his skills and prowess on the field. Now the popular cricket star will be testing his skills in the motorcycle industry. He will provide inputs to the build of his custom motorcycle, which will be revealed at the 2015 India Bike Week festival. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark