இந்திய மண்ணில் தரிசனம் கொடுத்த புதிய சுஸுகி பர்க்மேன் 650சிசி ஸ்கூட்டர்!

Written By:

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி பர்க்மேன் 650 எக்ஸிகியூட்டிவ் என்ற 650சிசி ரக ஸ்கூட்டர் மாடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதே பார்வையாளர்களை இந்த ஸ்கூட்டர் வெகுவாக கவர்ந்ததுடன், ஆர்வத்தையும் கிளறியது.

ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் வைக்கப்படும் இதுபோன்ற உயர்வகை வாகனங்கள் மூலம், தங்களது பிராண்டின் வல்லமையை பரைசாற்றும் நோக்கிலேயே பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படுவதால், அப்போது அதிக முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால், இப்போது அதிக முக்கியத்துவத்தையும், ஆவலையும் ஏற்படுத்தியிருக்கிறது சுஸுகி பர்க்மேன்.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

டெல்லி அருகே நொய்டாவில் அமைந்திருக்கும் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தில் இந்த ஸ்கூட்டர் சமீபத்தில் வருகை தந்துள்ளது. அதனை ரஷ்லேன் ஆட்டோமொபைல் இணையதளத்தின் வாசகர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

ஆஜானுபாகுவாக தோற்றமளிக்கும் இந்த ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் இப்போது இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது. பண்டிகை காலத்தை கருதி, இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிப்பதால், ஆவலை எகிற செய்திருக்கிறது.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

மேலும், தற்போது 150சிசி ரகத்திலான ஸ்கூட்டர்கள்தான் அதிக சக்திவாய்ந்த மாடல்களாக இருக்கின்றன. எனவே, புதிய சுஸுகி பர்க்மேன் 650 எக்ஸிகியூட்டிவ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடலாக பெயர் பெறும்.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

இந்த புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 638சிசி திரவ குளிர்விப்பு தொழில்நுட்பம் முறையிலான எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் என்ற நவீன எரிபொருள் செலுத்து அமைப்பு கொண்டது.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக வரும் இந்த ஸ்கூட்டரில் மேனுவல் முறையில் கியர்களை மாற்றிக் கொள்வதற்கான ராக்கர் பட்டன் என்ற வசதி ஹேண்டில்பாரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. Drive மற்றும் Power என இரண்டுவிதமாக எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதியும் உண்டு.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

டூரர் பைக்குகள் போன்ற முகப்பு, இருக்கைகள் ஸ்கூட்டர் போன்ற கால் வைப்பதற்கான ஃபுட்போர்டு ஆகியவற்றுடன் மிக மிரட்டலாக இருக்கிறது இந்த ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் அமைப்பும் உள்ளது.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

2,265மிமீ நீளம், 810மிமீ அகலம், 1,585மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த ஸ்கூட்டர் 125மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. சாதாரண ஸ்கூட்டர்கள் 105 கிலோ முதல் 120 கிலோ வரை எடை கொண்டிருக்கும். ஆனால், இந்த ஸ்கூட்டர் 278 கிலோ எடை கொண்டது என்பதையும் மனதில் வைக்கவும்.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய விண்ட்ஸ்கிரீன் கண்ணாடி, தானாக மடங்கிக் கொள்ளும் வசதியுடன் சைடு மிரர்கள், வெதுவெதுப்பான சீதோஷ்ணத்தை அளிக்க வல்ல இருக்கைகள், கைப்பிடிகள் இதன் முக்கிய விஷேசங்கள்.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

இந்த ஸ்கூட்டரில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான அறை உள்ளது. இரண்டு ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்டுகளை வைக்க முடியும். இந்த ஆண்டிலேயே விற்பனைக்கு வரும்பட்சத்தில் நேரடி போட்டி எதுவும் இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு இதுபோன்ற உயர்வகையிலான பீஜோ ஸ்கூட்டர்களை மஹிந்திரா அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சுஸுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!

பெரும்பாலும் இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்படும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப விலையும் கணிசமாகவே இருக்கும்.

Source: Rushlane

English summary
2016 Suzuki Burgman 650 Executive spied in Indian Soil. Read the complete details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos