புதிய பஜாஜ் பல்சர் 180 பைக்கின் படங்கள் கசிந்தன... மாற்றங்கள் என்னென்ன?

Written By:

மார்க்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பைக் மாடல் பஜாஜ் பல்சர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அவ்வப்போது பல்சர் மாடல்களை பஜாஜ் ஆட்டோ மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் பைக் மேம்படுத்தப்பட்டு விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், பல்சர் 220எஃப் பைக்கை தொடர்ந்து பல்சர் 180 பைக் மாடலும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய பல்சர் 180 பைக்கின் படங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகியிருக்கின்றன.

டிசைனை பொறுத்தவரையில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய வண்ண ஸ்டிக்கர்கள் மூலமாக புதிய மாடலாக வேறுபட்டிருக்கிறது.

ஆரஞ்ச் வண்ண டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இப்போது நீல வண்ண பின்னணியில் ஒளிரும் திரையுடன் மாற்றம் கண்டிருக்கிறது.

புதிய பல்சர் 180 பைக்கில் கருப்பு வண்ண மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட பளபளரப்பான க்ளிப் ஆன் ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டிருப்பதும் முக்கிய மாற்றம்.

தற்போதைய மாடலைவிட புதிய பல்சர் 180 பைக்கின் இருக்கைகள் மிகவும் சொகுசாக இருக்கும்படி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

புதிய பல்சர் 180 பைக்கின் மிக முக்கிய மாற்றங்களில் ஒன்று, பின்புறத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, புதிய பல்சர் 180 பைக்கின் எஞ்சினின் பவர் அதிகரிக்ப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.

மேலும், புதிய பல்சர் 180 பைக்கின் எஞ்சின் பாரத் 4 மாசு உமிழ்வு அம்சத்துடன் மேம்படுத்தப்ப்டடிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எரிபொருள் சிக்கனத்திலும் மேம்பட்டிருக்கும்.

தற்போது பல்சர் 180 பைக்கில் 178.6சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இதே எஞ்சின்தான் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போதைய பல்சர் 180 மாடல் அதிகபட்சமாக 17.02 பிஎச்பி பவரையும், 14.22 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. புதிய மாடல் இதைவிட பவர்ஃபுல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Via- Youtube

English summary
The 2017 Bajaj Pulsar 180 has been fully revealed ahead of its launch. The motorcyle features minor changes in terms of design.
Story first published: Monday, November 7, 2016, 9:43 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos