2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக்கின் படங்கள், விலை விவரம் வெளியீடு

Written By: Staff

ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

சமீபத்தில் வெளியாகிய 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக் பற்றிய கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர்

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர்

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் உற்பத்தி செய்யும் இரு சக்கர வாகனம் ஆகும்.

இது உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், ஏபிஎஸ் மற்றும் நான்-ஏபிஎஸ் எனப்படும் 2 வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

ஏபிஎஸ் என்பது ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்பதை குறிக்கிறது.

புதிய தொழில்நுட்பம்;

புதிய தொழில்நுட்பம்;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், ஹோண்டா நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட திராட்டில்-பை-வயர் (Throttle-by-Wire (TbW)) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களும் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

லிட்டில் ஃபயர்பிளேட் ("little FireBlade") என்றும் அழைக்கப்படும் இந்த 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், 250சிசி, ஸ்ட்ரெய்ட் ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜினின் செயல்திறன் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் விரிவான விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தோற்றம்;

தோற்றம்;

கூர்மையான மற்றும் ஆக்கிரோஷமான ஸ்டைலிங் அம்சங்களுடன் தயாரிப்பு நிலை 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், புரோட்டோடைப் பைக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

இதன் எல்இடி ஹெட்லைட்கள், ட்வின் பேரல் எக்ஸ்ஹாஸ்ட்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், இதன் தோற்றத்திற்கு மேலும் அழகு கூட்டுகிறது.

பிரேக்;

பிரேக்;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக்கிற்கு, முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் சிங்கிள் பெடல்-ரோட்டர் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக்கின் முன் பக்கத்தில் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், தற்போதைய நிலையில், இந்தோனேஷியாவில் உள்ள ஹோண்டா உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் ஜப்பான் வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும்.

இந்தியாவில் அறிமுகம்?

இந்தியாவில் அறிமுகம்?

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்பது குறித்து, இது வரை, எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

விலை;

விலை;

2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், இந்தோனேஷியாவில், 63 மில்லியன் இந்தோனேஷிய ருபையா (இந்திய மதிப்பில் 3.2 லட்சம் ரூபாய்) என்ற விலையில் விற்பனை செய்யப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மூவர்ணத்தில் கலக்கும் புதிய ஹோண்டா சிபிஆர் 250ஆர் அறிமுகம்

2016 ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 பைக் இந்தியாவில் மறு அறிமுகம் - முழு விவரம்

ஹோண்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
World witnessed Honda unveil the much anticipated 2017 Honda CBR 250RR this week. In Indonesia, this bike comes with price tag of 63 Million Indonesian Rupiah (Rs. 3.2 lakh). New CBR 250RR is offered in two variants - ABS and non-ABS. Details about India debut of Honda CBR250RR remains mystery. CBR250RR is produced at Honda's facility in Indonesia. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark