பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் அறிமுகம்!

Written By:

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு அம்சம் கொண்ட எஞ்சினுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. ஏற்கனவே, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது.

தற்போது, இருசக்கர வாகன நிறுவனங்கள் இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் இருசக்கர வாகனங்களை முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

 பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் அறிமுகம்!

அந்த வகையில், பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்கள், புதிய அம்சங்களை தொடர்ந்து காணலாம்.

 பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் புதிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நீல வண்ணத்தில் வந்துள்ளது. அத்துடன், பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் க்ரே, பியர்ல் அமேஸிங் ஒயிட் மற்றும் இம்பீரியல் ரெட் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

 பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் 162.71சிசி எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13.82 பிஎச்பி பவரையும், 13.92 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் அறிமுகம்!

பழைய மாடலில் இருந்த பிஎஸ்-3 மாசு உமிழ்வு அம்சத்துடன் கூடிய எஞ்சின் 14.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனால், புதிய மாடலின் எஞ்சினின் பவரை வெளிப்படுத்தும் திறன் சற்று குறைந்துள்ளது. அதாவது, யூனிகார்ன் 150 பைக்கின் 13.14 பிஎச்பி பவரை அளிக்க வல்ல எஞ்சினைவிட சற்றே கூடுதலாக இருக்கிறது.

 பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா யூனிகார்ன்160 பைக்கில் ஆட்டோ ஹெட்லைட் பொருத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன், இந்த பைக்கின் வைசர் 2மிமீ கூடுதல் உயரம் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

 பிஎஸ்-4 மாசு உமிழ்வு அம்சத்துடன் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.73,481 விலையிலும், சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.75,934 விலையிலும் கிடைக்கிறது.

English summary
Honda Motorcycle and Scooter India has launched the 2017 Unicorn 160 with the upgraded BSIV engine to comply with the new emission norms.
Please Wait while comments are loading...

Latest Photos