புதிய வண்ணங்களில் வரும் 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் - வாசகர் அனுப்பிய படங்கள்!

Written By:

புத்தாண்டு வருவதையொட்டி, வாடிக்கையாளர்களை கவர்வதற்கு சில கவர்ச்சிகர கூடுதல் அம்சங்களுடன் கார் மற்றும் பைக்குகள் வர இருக்கின்றன. அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் வரிசை மோட்டார்சைக்கிள் மாடல்கல் புதிய வண்ணங்களில் வர இருக்கின்றன.

அந்த மோட்டார்சைக்கிள் படங்களை எமது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் வாசகர் ஃபாசில் அனுப்பியிருக்கிறார். அந்த பிரத்யேக ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

புதிய வண்ணங்களில் வரும் 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள்- வாசகர் அனுப்பிய படங்கள்!

வாசகர் ஃபாசில் அனுப்பி வைத்துள்ள ஸ்பை படங்களில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள்கள் புதிய வண்ணங்களில் வருவது உறுதியாகி உள்ளது. வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த மோட்டார்சைக்கிள்களை புதுப்பொலிவுடன் புத்தாண்டு முதல் வழங்குவதற்கு ராயல் என்ஃபீல்டு முனைந்துள்ளது.

புதிய வண்ணங்களில் வரும் 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள்- வாசகர் அனுப்பிய படங்கள்!

புதிய வண்ணங்கள் மற்றும் புதிய ஸ்டிக்கர்களுடன் வருகின்றன. மேலும், இருக்கைகளும் புதிதாக கொடுக்கப்பட்டு இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது.

புதிய வண்ணங்களில் வரும் 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள்- வாசகர் அனுப்பிய படங்கள்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஜிடி புளூ என்ற நீல வண்ணத்திலும், ஜிடி ரெட் என்ற சிவப்பு வண்ணத்திலும் வருகிறது. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளை போன்ற புதிய வண்ணங்களில் வருகிறது. கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளுக்கான புதிய வண்ணங்கள் குறித்த தகவல் இல்லை.

புதிய வண்ணங்களில் வரும் 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள்- வாசகர் அனுப்பிய படங்கள்!

2017 மாடலாக வரும் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள்களின் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று தெரிகிறது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், புதுப்பொலிவுடன் மோட்டார்சைக்கிள்களை சந்தைப்படுத்துவதற்கும் இந்த முயற்சியை அந்த நிறுவனம் செய்துள்ளது.

புதிய வண்ணங்களில் வரும் 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள்- வாசகர் அனுப்பிய படங்கள்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

புதிய வண்ணங்களில் வரும் 2017 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள்- வாசகர் அனுப்பிய படங்கள்!

இதேபோன்று கார், பைக்குகளின் ஸ்பை படங்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் வெளியிட விரும்பினால் கீழ் கண்ட இ-மெயில் முகவரிக்கு பெயர், ஊர் உள்ளிட்ட விபரங்களுடன் அனுப்புங்கள். உரிய விபரங்களுடன் வெளியிடப்படும்.

ஸ்பை படங்களை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:

drivespark@oneindia.co.in

English summary
The updated Classic lineup to hit the showrooms by early 2017.
Please Wait while comments are loading...

Latest Photos