புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

புதிய அம்சங்களுடன் சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

உலக அளவில் புகழ்பெற்ற சூப்பர்பைக் மாடல் சுஸுகி ஹயுபசா. அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் உலகின் அதிவேக தயாரிப்பு நிலை சூப்பர் பைக் மாடல் என்ற பெருமைக்கும் உரியதாக இருந்தது.

சந்தைப்போட்டி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சரிகட்டும் விதத்தில் தற்போது சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் சில புதிய விஷயங்களுடன் இந்தியா வந்துள்ளது. அதுகுறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

வடிவமைப்பில் மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய ஹயபுசா சூப்பர்பைக் கருப்பு- வெள்ளை, கருப்பு- நீலம், கருப்பு ஆகிய மூன்று புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

எஞ்சினிலும் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,340சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையும், 154 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

 புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

மணிக்கு 299 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. உலகிலேயே அதிவேகத்தில் செல்லும் தயாரிப்பு நிலை மாடல் பைக்குகளில் தொடர்ந்து இதுவும் ஒரு முக்கிய மாடலாக இடம்பெற்று வருகிறது.

 புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

புதிய ஹயபுசா பைக் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு ஹரியானாவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். இதனால், மிக சரியான விலையில் சுஸுகி ஹயபுசா விற்பனைக்கு வந்துள்ளது.

 புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

ரூ.13.88 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர்பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் சுஸுகி நிறுவனத்தின் பிக் பைக் என்ற பிரத்யேக சூப்பர்பைக் டீலர்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
Model Year 2017 of Suzuki Hayabusa receives three new and exciting colour updates. No mechanical changes have been carried out on the 2017 CKD Suzuki Hayabusa.
Story first published: Tuesday, November 8, 2016, 9:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X