பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் பற்றிய 7 முக்கிய விஷயங்கள்!

By Saravana Rajan

பல்சை எகிற வைக்கும் பல்சர் பிராண்டு மீது இளசுகளுக்கு தீராத மோகம் இருந்து வருகிறது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், பல்சர் வரிசையில் பல சக்திவாய்ந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ களமிறக்கி வருகிறது.

அதில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய மாடல் பல்சர் சிஎஸ்400. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பல்சர் பைக் மாடலாக வருவதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். இந்த நிலையில், இந்த பைக்கின் அறிமுக காலத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரி ரவிக்குமார் உறுதிபடுத்தியிருக்கிறார். எனவே, இந்த பைக் குறித்த பல முக்கிய விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அறிமுக விபரம்

அறிமுக விபரம்

ஜூலை- செப்டம்பர் இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரி ரவிக்குமார் கூறியிருக்கிறார். அப்படியானால், அடுத்த ஒரு சில மாதங்களில் இந்த பைக் விற்பனைக்கு வந்துவிடுவது உறுதியாகிவிட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் தற்போது இந்த பைக்கை வாங்குவதற்கு தயாராகிவிடலாம்.

 டிசைன்

டிசைன்

கடந்த 2014ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல்சர் சிஎஸ்400 பைக்கின் கான்செப்ட் மாடலுக்கும், சமீபத்தில் கிடைத்த ஸ்பை படங்களின் உற்று நோக்கும்போது. அதிக வித்தியாசங்கள் இல்லை. இந்த பைக் க்ரூஸர் ஸ்போர்ட் என்ற ரகத்தில் விற்பனைக்கு வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் இருக்கும் அதே 373.2சிசி எஞ்சின்தான் சில மாறுதல்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கும். கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் எஞ்சின் 44 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் நிலையில், இந்த பைக்கின் எஞ்சினும் கிட்டத்தட்ட அதே அளவு திறன் கொண்டதாக இருக்கும். அதேநேரத்தில், இது க்ரூஸர் ஸ்போர்ட்ஸ் பைக் ரகத்தில் வருவதால், அதிக டார்க்கை வெளிக்கொணரும் விதத்தில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

பிரத்யேக தொழில்நுட்பம்

பிரத்யேக தொழில்நுட்பம்

அதேநேரத்தில், பல்சர் சிஎஸ்400 பைக்கை வாங்குவோர்க்கு போனசாக ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக்குகள் கொண்ட எஞ்சினுடன் வருகிறது. ஸ்பை படங்களில் ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக்குகள் உள்ளதை காட்டுவதற்கான லோகோ இடம்பெற்றிருப்பதால், இது உறுதியான விஷயம். இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கும் உள்ளது. அத்துடன், புதிய பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக்கில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும்.

 இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

டுகாட்டி டயாவெல் பைக்கின் ஸ்டைலில், இதில் இரண்டு டிஜிட்டல் பேனல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதன்மையான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஹேண்டில்பாரை ஒட்டியும், மற்றொன்று பெட்ரோல் டேங்க் மூடிக்கு முன்னால் சற்று தள்ளி அமைந்துள்ளது. முதன்மையான பேனலின் மூலமாக எஞ்சின் சுழல் வேகம், எரிபொருள் அளவு, ஓடிய தூரத்தை காட்டும் விபரங்களும், பெட்ரோல் டேங்க்கில் அமைந்திருக்கும் டிஜிட்டல் பேனலின் மூலமாக, வண்டியின் வேகம், எந்த கியரில் செல்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

புதிய பஜாஜ் சிஎஸ்400 பைக் ரூ.1.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது போட்டியாளர்களைவிட குறைவான விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும் என்பதையும் இதனை வாங்க பிரியப்படும் இளைஞர்கள் மனதில் வைக்க வேண்டும்.

Most Read Articles
English summary
7 Important Facts about the All new Bajaj Pulsar CS400 Bike.
Story first published: Saturday, June 25, 2016, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X