இந்தியன் நிறுவனத்தின் புதிய ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் - விபரம்

By Saravana

அமெரிக்காவை சேர்ந்த பாரம்பரியமிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் சமீபத்தில் ஸ்பிரிங்ஃபீல்டு என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த மோட்டார்சைக்கிளை பற்றிய விபரங்களை இங்கே தருவதற்கு காரணம் இருக்கிறது.

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற காரணம் ஒருபுறம் இருந்தாலும், இந்த புதிய மாடலை வாங்குவதற்கு இந்தியாவிலிருந்து ஒரு வாடிக்கையாளர் முன்பதிவு செய்துள்ளாரார். அதுவும் அவர் தென் இந்தியாவை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல். சரி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, இத்தனை ஆர்வமாக அவர் இந்த புதிய இந்தியன் பைக்கை முன்பதிவு செய்வதற்கு காரணமாக இருக்கும் இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பெயர் காரணம்

பெயர் காரணம்

அமெரிக்காவின் மாசாசூட்ஸ் நகரிலுள்ள ஸ்பிரிங்ஃபீல்டு என்ற இடத்தில்தான் முதல்முதலில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் துவங்கப்பட்டது. அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இந்த புதிய மாடலுக்கு பெயர் சூட்டியிருக்கிறது இந்தியன் நிறுவனம்.

அடிப்படை

அடிப்படை

இந்தியன் சீஃப் விண்டேஜ், சீஃப்டெயின் மோட்டார்சைக்கிள்களின் அடிப்படை டிசைன் தாத்பரியங்களை பயன்படுத்தி இந்த புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருக்கின்றனர்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் 49 டிகிரி கோணத்தில் அமைக்கப்பட்ட 1811சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 161.6 என்எம் டார்க்கை வழங்கும்.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கீ லெஸ் ஸ்டார்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் போன்றவை இடம்பெற்று இருக்கிறது.

மீட்டர் கன்சோல்

மீட்டர் கன்சோல்

பெட்ரோல் டேங்கில் எலக்ட்ரானிக் ஸ்பீடோமீட்டர், ஓடோ மீட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கன்றன. இரண்டு ட்ரிப் மீட்டர்கள் உள்ளன. இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது குறித்த தகவல் தரும் வசதி, சராசரி மைலேஜ், கியர் இன்டிகேட்டர், எஞ்சின் ஆயில் அளவு, எரிபொருள் குறைவு குறித்து எச்சரிக்கும் வசதி என இந்த பட்டியல் நீள்கிறது.

வசதிகள்

வசதிகள்

ரிமோட் கன்ட்ரோல் மூலமாக திறக்கும் வசதியுடையே சாடில் பைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு தேவையான பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய சேஸீ

புதிய சேஸீ

இந்த புதிய இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் புதிய சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது முழு பாரத்துடன் செல்லும்போது கூட ஒப்பிட முடியாத அளவு சிறந்த கையாளுமையை வழங்கும் என இந்தியன் நிறுவனம் தெரிவிக்கறது.

எடை

எடை

இந்த மோட்டார்சைக்கிள் 242 கிலோ எடை கொண்டது. அதேநேரத்தில், சிறப்பான கையாளுமை கொண்ட க்ரூஸர் பைக் மாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விலை

விலை

இந்தியன் ஸ்பிரிங்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் தண்டர் பிளாக் மாடல் 20,900 டாலர் விலையிலும், பாரம்பரிய சிவப்பு வண்ண மாடல் 21,549 டாலர் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

முக்கிய சிறப்பு

முக்கிய சிறப்பு

இந்த மோட்டார்சைக்கிளின் முக்கிய சிறப்பு, இதனை க்ரூஸர் பைக்காகவும், பேக்கர் என இரு ரகத்தில் உடனடியாக மாற்றி பயன்படுத்தலாம். அதாவது, இதிலுள்ள விண்ட்ஷீல்டு, சாடில்பேக்குகளை கழற்றிவிட்டால், உடனடியாக க்ரூஸர் பைக் போன்ற தோற்றத்தை பெறும்.

Most Read Articles
English summary
All New Indian Springfield Motorcycle Details
Story first published: Friday, April 15, 2016, 14:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X