இருசக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

Written By:

தமிழகத்தில் 35 ஊராட்சி ஒன்றியங்களில் அம்மா இருசக்கர வாகன பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்புக்கான பயிற்சி மையங்களை அமைக்க இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்த பயிற்சி மையங்களில் ஒவ்வொன்றிலும் தலா 30 பேருக்கு இருசக்கர வாகனங்களுக்கான பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு குறித்த 3 மாத கால பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலத்தின்போது பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ரூ.1.65 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், பயிற்சி முடிந்ததும் சுயதொழில் தொடங்குவதற்கும் அரசு உதவி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இருசக்கர வாகன சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று, இருசக்கர வாகன பழுது நீக்கும் துறைக்கு தேவைப்படும் திறன் கொண்ட மெக்கானிக்குகளை பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கும் பயன் தரும் விஷயமாகவே அமையும்.

English summary
'Amma' 2-Wheeler Service Training Centres In Tamil Nadu. Read more details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos