அப்ரிலியா எஸ்ஆர் 150 ஷோரூமிற்கு வந்தடைந்தது - குறைந்த விலை புக்கிங்கிற்கு முந்துங்கள்

Written By:

பியாஜியோ நிறுவனம் உற்பத்தி செய்யும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், பெங்களூருவில் உள்ள வெஸ்பா ஷோரூம் வந்தடைந்தது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் குறித்த கூடுதல் விவரங்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150...

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் பியாஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான அப்ரிலியா பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர் ஆகும்.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்திய வாகன சந்தைகளில் அகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

டிஸ்பிளே;

டிஸ்பிளே;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வெஸ்பா ஷோரூம்கள் மூலமாகவே விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், ஒன்றன்பின் ஒன்றாக வெஸ்பா ஷோரூம்கள் சென்றடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அப்ரிலியா எஸ்ஆர் 150, பெங்களூருவில் உள்ள வெஸ்பா ஷோரூம் வந்தடைந்தது.

இந்த ஸ்கூட்டர் தற்போது வாடிக்கையாளர்கள் காணும் வகையில் டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளது.

விலை;

விலை;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 65,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுகம் விலையில், அறிமுகம் செய்யப்படும் என அப்ரிலியா நிறுவனம் ஒரு வார காலத்திற்கு முன்பு தெரிவித்திருந்தது.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், கர்நாடகாவில் சுமார் 80,000 ரூபாய் என்ற (ஆன்-ரோட் பெங்களூரு) விலையில் விற்கப்படும்.

புக்கிங்;

புக்கிங்;

திறன்மிக்க அப்ரிலியா எஸ்ஆர் 150 வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், 5,000 ரூபாய் என்ற புக்கிங் தொகையை செலுத்தி இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 65,000 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலை, வெறும் அறிமுக விலை என்று மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 150சிசி ஸ்கூட்டர் என்பதாலும், நல்ல டிசைன், அசத்தலான செயல்திறன் கொண்டுள்ளதாலும், இதன் விலை கிடுகிடுவென உயர வாய்ப்புகள் உள்ளன.

இதனால், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஆர்வலர்கள், தங்களுக்கு பிடித்த வாகனத்தை குறைந்த விலையில் புக்கிங் செய்து கொள்ள, வெஸ்பா ஷோரூம்களுக்கு முந்துமாறு கேட்டுக்கொள்லப்படுகிறது.

காத்திருப்பு காலம்;

காத்திருப்பு காலம்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், புக்கிங் செய்த நாள் துவங்கி சுமார் 45 முதல் 60 நாட்கள் வரையிலான காத்திருப்பு காலம் தாண்டி, இந்த ஸ்கூட்டரின் டெலிவரி பெற்று கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், 150சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

வெஸ்பா 150 ஸ்கூட்டரில் காணப்படும் அதே இஞ்ஜின், இந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரில் போருத்தப்பட்டுள்ள போதிலும், மேம்பட்ட செயல்பாடு மற்றும் மைலேஜ் வழங்கும் வகையில், இதன் இஞ்ஜின் ரீ-டியூனிங் செய்யப்பட்டு வழங்கப்படும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஸ்கூட்டர்களை போல், அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காணப்பட்ட அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், டெலஸ்கோப்பிக் ஃபிரண்ட் ஃ போர்க்குகள், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் கொண்டுள்ளது.

இது பிரத்யேகமான ஹெட்லைட் ஸ்விட்ச் கொண்டிறாததால், இதன் ஹெட்லைட் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கும்.

இதே அம்சங்கள் தான், தயாரிப்பு நிலை அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரிலும் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி;

உற்பத்தி;

பியாஜியோ நிறுவனம், இந்த அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரை, மகாராஷ்டிராவின் பாராமதி என்ற இடத்தில் உற்பத்தி ஆலையில் தயாரித்து வருகிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், இத்தகைய சவாலான விலையில் அளிக்க முடிவதாக கூறப்படுகிறது.

போட்டி;

போட்டி;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டருக்கு, இந்திய வாகன சந்தைகளில், நேரடி போட்டி போல் எந்த வாகனமும் இல்லாத நிலை உள்ளது.

வெறும் வெஸ்பா மட்டும் தான் 150 சிசி ஸ்கூட்டரை இந்திய வாகன சந்தைகளில் வழங்கி வருகிறது. ஆதலால் வெஸ்பா 150 ச்கூட்டரிடம் இருந்து மட்டும் சற்று போட்டியை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், வைட் மற்றும் பிளாக் என இரு நிறத்தில் கிடைக்கும். எனினும், அப்ரிலியா எஸ்ஆர் 150 கிடைக்கும் நிறங்களின் முறையான பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் உற்பத்தி இந்தியாவின் பாராமதி என்ற இடத்தில் துவக்கம்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் ப்ரீ-புக்கிங் துவக்கம்

அப்ரிலியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் - கூடுதல் படங்கள்

English summary
Much awaited scooter from Aprilia, the SR 150 has arrived in Bangalore and it is currently on display at Vespa showroom. Aprilia SR 150 scooter is priced approximately Rs. 80,000 on-road (Bangalore). After Booking, Waiting period is around 45 to 60 days for delivery. Booking amount is fixed at Rs. 5,000. Aprilia is readying to launch this Scooter in August. To know more, check here...
Story first published: Wednesday, July 27, 2016, 14:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more