சவாலான விலையில் புதிய அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது!

Written By:

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் சற்றுமுன் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வேர்ல்டு சூப்பர்ஸ்டாக் பைக் பந்தய சாம்பியன் லாரென்ஸோ சவடோரி இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தார்.

போட்டியாளர்களிடத்தில் இருந்து டிசைன், சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் தனித்துவம் மிக்கதாக வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர் பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஸ்டைல்

ஸ்டைல்

இது மிக ஸ்டைலான மாடலாக இருப்பதால் கல்லூரி மாணவர்களை வெகுவாக கவரும். அத்துடன், பிரிமியம் பிராண்டு என்ற முத்திரையும் இந்த ஸ்கூட்டரை வாங்கத் தூண்டுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரில் இருக்கும் சிங்கிள் சிலிண்டருடன் இயங்கும் 154.4சிசி ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 11.4 பிஎச்பி பவரையும், 11.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதாவது, மிகவும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் மாடலாகவும் இருக்கிறது.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

இந்த ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிக ஏற்றதாக இருக்கும். மணிக்கு 95 கிமீ வேகம் வரை எட்ட முடியும். லிட்டருக்கு 45 கிமீ மைலேஜை தரும் என அப்ரிலியா தெரிவிக்கிறது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த ஸ்கூட்டரில் 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுவும் முக்கிய வசதியாகவே பார்க்கப்படுகிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

வசதிகள்

வசதிகள்

இரட்டை டயல்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பாஸ் சுவிட்ச் வசதியுடன் வந்திருக்கிறது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

அப்ரிலியா ஸ்கூட்டரின் மற்றொரு சிறப்பம்சம் டிஸ்க் பிரேக் வசதியுடன் வந்துள்ளது. ஆம், முன்புறத்தில் இரட்டை பிஸ்டன் கொண்ட 220மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் உள்ளது.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் அலாய் வீல்களும், 120/70 அளவுடைய டயர்களும் இருக்கின்றன. இந்த அலாய் வீல்கள், ஸ்கூட்டருக்கு வித்தியாசமான தோற்றத்தை வழங்குகிறது.

விலை

விலை

ரூ.65,000 புனே எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது அறிமுகச் சலுகை விலை. எனவே, அடுத்த சில மாதங்களில் விலை ஏற்றும் வாய்ப்பும் உண்டு. ரூ.5,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கனவே நடந்து வருகிறது.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

பிரிமியம் மோட்டார்சைக்கிள்கள் மூலம் உலக புகழ்பெற்ற அப்ரிலியா பிராண்டிலிருந்து வரும் விலை குறைவான இந்த மாடலாக வந்திருப்பதும் இந்த ஸ்கூட்டரின் விற்பனையில் எதிரொலிக்கும் என நம்பலாம்.

 பியாஜியோ குழுமம்

பியாஜியோ குழுமம்

வெஸ்பா பிராண்டை தொடர்ந்து தற்போது அப்ரிலியா பிராண்டிலும் புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது பியாஜியோ குழுமம்.

 

English summary
Aprilia Launches Its Most Affordable Two-Wheeler In India — The SR 150.
Story first published: Monday, August 22, 2016, 21:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark