அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரின் விலை வெளியீடு... வெஸ்பாவைவிட குறைவு!

Written By:

அப்ரிலியோ எஸ்ஆர்150 பிரிமியம் ஸ்கூட்டரின் விலை விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது. வெஸ்பா மாடலைவிட விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள பியாஜியோ குழுமத்தின் டீலர்களில் இந்த புதிய 150சிசி ஸ்கூட்டருக்கான முன்பதிவு விரைவில் துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

எதிர்பார்ப்பு ஏன்?

எதிர்பார்ப்பு ஏன்?

உயர்வகை இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அப்ரிலியா பிரிமியம் பிராண்டில் மிக சவாலான விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. எனவே, வெஸ்பா, ஆக்டிவா வாங்க திட்டமிட்டிருப்போர், இந்த ஸ்கூட்டர் மீது தங்களது கவனத்தை திசை திருப்பும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 விலை விபரம்

விலை விபரம்

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் ரூ.65,000 விலையையொட்டி, விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அறிமுக சலுகை விலையாக இது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த மாதம் இந்த புதிய ஸ்கூட்டரை முறைப்படி விற்பனைக்கு கொண்டு வர பியாஜியோ குழுமம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டரில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 150சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் பவர், டார்க், செயல்திறன் உள்ளிட்ட விபரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.

கையாளுமை

கையாளுமை

கையாளுமையில் மார்க்கெட்டிலேயே மிகச்சிறந்த ஸ்கூட்டராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என நம்பலாம்.

ஸ்டைல்

ஸ்டைல்

சக்திவாய்ந்த ஸ்கூட்டராக மட்டுமில்லாமல், மிக ஸ்டைலான தோற்றத்துடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் டிசைனுடன் வருகிறது. எனவே, இளைஞர்களை இந்த ஸ்கூட்டர் வெகுவாக கவரும்.

டிஸ்க் பிரேக் சிஸ்டம்

டிஸ்க் பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், 14 இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. எனவே, பாதுகாப்பு அம்சத்திலும் சிறப்பானதாக இருக்கும்.

விலை சாத்தியமானது எப்படி?

விலை சாத்தியமானது எப்படி?

மஹாராஷ்டிர மாநிலம், பாரமதியில் உள்ள பியாஜியோ இருசக்கர வாகன ஆலையில் இந்த புதிய ஸ்கூட்டர் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. எனவே, போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது.

வெஸ்பாவுக்கு நெருக்கடி

வெஸ்பாவுக்கு நெருக்கடி

வெஸ்பா விஎக்ஸ்எல் 150 ஸ்கூட்டர் ரூ.92,000 விலையிலும், வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 ஸ்கூட்டர் ரூ.96,000 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படும் நிலையில், அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர் மிக குறைவான விலையில் வருவது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். வெஸ்பாவும், அப்ரிலியாவும் பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்பட்டாலும், இது பங்காளி யுத்தமாகவே அமையும்.

 

English summary
Aprilia SR 150 Priced At Rs. 65,000; Launch Slated For August 2016.
Story first published: Monday, July 18, 2016, 17:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark